ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்கள் பின்வாங்கினர்

ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்கள் பின்வாங்கினர்

1 mins read
7f7b4c6c-c957-40af-a29a-222ebf2884a6
-

யங்­கூன்: மியன்­மா­ரின் ராணுவ ஆட்­சியை எதிர்க்­கும் உள்­ளூர் போரா­ளி­கள் குழு ஒன்று பின்­வாங்­கி­யுள்­ளது.

மியன்­மா­ரின் வட­கி­ழக்கு நக­ர­மான மிண்­டாட்­டில் ராணுவப் படை­யி­னர் கடந்த சில நாட்­க­ளாக மேற்­கொண்ட பீரங்­கித் தாக்­கு­த­லுக்கு மத்­தி­யில் அவர்­கள் பின்­வாங்­கி­யுள்­ள­னர்.

ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­ய­தில் இருந்து நடந்து வரும் வன்­மு­றை­க­ளால், அதி­கம் பாதிக்­கப்­பட்ட நக­ரங்­களில் ஒன்று மிண்­டாட் நக­ரம் ஆகும்.

"மோத­லைத் தவிர்ப்­ப­தற்­காக

வும், ஊருக்கு ஏற்­படும் சேதங்­கள் பற்­றிய கவ­லை­யாலும் நாங்­கள் பின்­வாங்­கி­னோம்," என்று போராளி ஒருவர் கூறி­னார்.

அதோடு 40,000க்கும் அதி­க­மா­னோர் வசிக்­கும் நக­ரத்­தில் பெண்­கள் மற்­றும் குழந்­தை­கள் மட்­டுமே உள்­ள­தா­க­வும், அது­வும் இப்­போது பெரும்­பா­லும் ராணு­வத்­தால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

"எல்லா ஆண்­களும் இளை­யர்­களும் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­தால், அவர்­கள் அனை

­வ­ரும் ஓடித் திரி­கி­றார்­கள்," என்றார் அவர். டாட்­மாடா என்று அறி­யப்­படும் அந்த போரா­ளி­கள் குழு­வில் இருந்து ஐந்து பேர் மாண்­டு­விட்­ட­தாக அமெ­ரிக்க நிதிபெறும் இணை­யத்தளம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

அதே சம­யம் ராணுவ கட்­டுப்­பாட்டு தொலைக்­காட்சி, நேர்­மை­யற்ற மக்­க­ளின் தாக்­கு­த­லால் பாது­காப்புப் படை­யி­னர் சிலர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் சில­ரைக் காண­வில்லை என்­றும் கூறி­யது.

இதற்­கி­டையே, அப்­பா­வி­கள் உயி­ரி­ழப்­ப­தைத் தவிர்க்க வேண்­டும் என்று அமெ­ரிக்­கா­வும் பிரிட்­டனும் மியன்­மார் ராணு­வத்­திற்கு அழைப்பு விடுத்­துள்­ளது.