கந்தகார்: ஆப்கானிஸ் தானில் தலிபான்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே நேற்று மீண்டும் சண்டை தொடங்கியது. நோன்புப் பெருநாளை முன்னிட்டு சண்டையிடுவதை மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டு இருந்தன. ஹெல்மாண்ட் பகுதியில் லஷ்கர் காவில் மோதல்கள் வெடித்தன. இதற்கிடையே, சென்ற வெள்ளியன்று பள்ளி
வாசலில் நிகழ்ந்த குண்டு
வெடிப்பிற்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

