கொவிட்-19 தொற்று என்று பொய் சொன்னதாக குற்றச்சாட்டு

கொவிட்-19 தொற்று என்று பொய் சொன்னதாக குற்றச்சாட்டு

1 mins read
8a79cd85-c458-4909-87d7-f5c8119bc2ae
-

சான் கின் நாங் பால், 40, என்ற ஆடவர், சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் பிற்பகல் 12.47 மணிக்கு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான லாவ் ஸென் ஜுயென் என்பவருக்கு மின்னஞ்சல் அனுப்பினார்.

'கொவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனையில் தனிமையில் இருக்கிறேன். ஆகையால் நாளை நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாது' என்று அவர் அனுப்பிய மின்னஞ்சல் தெரிவித்தது. இது பொய் என்பது தெரியவந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

ஆய்வாளரிடம் பொய் சொன்னதாக இன்று (மே 17) சான் மீது குற்றம் சுமத்தப்பட்டது. சான் ஜூன் 14ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்