சிங்கப்பூரில் நடைபெறவிருந்த உலகப் பொருளியல் கருத்தரங்கு கூட்டம் ஒத்திவைப்பு

சிங்கப்பூரில் நடைபெறவிருந்த உலகப் பொருளியல் கருத்தரங்கு கூட்டம் ஒத்திவைப்பு

1 mins read
9fe31393-c77c-4b1f-b982-341e8e457473
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த உலகப் பொருளியல் கருத்தரங்கு சிறப்பு வருடாந்திர சந்திப்பு அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிச்சயமற்ற பயணச் சூழல், புதுவகை கொரோனா கிருமி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அக்கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள் சுட்டினர்.

மாறாக, இந்தச் சந்திப்பு அடுத்த ஆண்டின் முதற்பாதியில் நடைபெறும். எதிர்வரும் மாதங்களில் கொவிட்-19 நிலவரத்தை மதிப்பீடு செய்த பின்னர் இக்கருத்தரங்கு நடைபெறும் இடம், தேதி உள்ளிட்ட விவரங்கள் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்