'எங்கள் வீட்டிற்கு வராதீர்கள்!'

'எங்கள் வீட்டிற்கு வராதீர்கள்!'

1 mins read
a32e51ff-8e0b-4e4c-8c32-6541cd64057a
படம்: தமிழக ஊடகம் -

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில், அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என்று அரசாங்கம் பொதுமக்களை அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், சேலம் நகர மக்களில் சிலர் ஒருபடி மேலே சென்று, 'நாங்களும் வரமாட்டோம், நீங்களும் வராதீர்கள்' எனும்படியாக தங்கள் வீடுகளின்முன் ஓர் அறிவிப்பை எழுதி வைத்துள்ளனர்.

அதில், விருந்தினர்கள், வெளியாள்கள் யாரும் வீட்டிற்குள் வர கட்டாயமாக அனுமதி இல்லை என்றும் யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதையும் மீறி வருபவர்களைத் தவிர்க்க, 'வீட்டிற்கு வர வேண்டாம்' என எழுதி வைக்கப்பட்டு உள்ள அறிவிப்புகளைப் படம் எடுத்து, உறவினர்கள், நண்பர்களின் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்