தாய்லாந்தில் புதிதாக 9,635 பேர் பாதிப்பு; சிறையிலும் கிருமித்தொற்று பரவுகிறது

தாய்லாந்தில் புதிதாக 9,635 பேர் பாதிப்பு; சிறையிலும் கிருமித்தொற்று பரவுகிறது

1 mins read
5e20f1b7-880e-48c7-a4af-2525bb8f2382
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் இது­வரை இல்­லாத அள­வுக்கு ஒரே நாளில் 9,635 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­களில் பெரும்­பா­லோர்­், அதா­வது 6,853 பேர் சிறைக் கைதி­கள் என்று தாய்­லாந்து அர­சாங்­கம் தெரிவித்­தது.

மொத்­தம் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 111,082க்கு அதி­க­ரித்­துள்­ளது.

புதி­தாக 25 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர்.

இத­னால் கடந்த ஆண்டு கொள்ளை நோய் பர­வி­ய­தி­லி­ருந்து இந்­நாள் வரை 614 பேர் இறந்­து­விட்­ட­னர்.

சிறைச்­சாலை குழு­மத்­தைத் தவிர புதிய சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 2,782. இது, கடந்த ஆண்டு பிற்­ப­கு­தி­யில் ஆக அதி­க­மாக பதி­வான 2,839 சம்­ப­வங்­க­ளுக்கு நெருக்­க­மாக தற்­போது கிரு­மித்தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

தாய்­லாந்­தில் முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் மற்­றும் எளி­தில் பாதிக்­கக்­கூ­டி­ய­வர்­கள் உட்­பட 2.2 மில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

சீனா­வின் சினோ­வாக் பயோ­டெக், பிரிட்­டிஷ்-சுவீ­ட­னின் அஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு வரு­கின்­றன.

இம்­மா­தம் பெரிய அள­வில் உள்­ளூ­ரில் தயா­ரிக்­கப்­பட்ட அஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்­பூ­சி­கள் போடப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்கு கடந்த வாரமே முன்­ ப­திவு தொடங்­கப்பட்டது.

இந்த இயக்­கத்­தின் மூலம் 66 மில்­லி­ய­னுக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட தாய்­லாந்­தில் 70 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போட இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.