கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இங்கிலாந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு

கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இங்கிலாந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு

1 mins read
6747c19c-651b-4242-8849-7a67ee746a60
லிவர் பூலில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் உணவுகளை வர வழைத்து ருசிக்கும் தம்பதி. கொவிட்-19 முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இங்கிலாந்து மக்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. படம்: ஏஎஃப்பி -

லண்­டன்: கிரு­மிப் பர­வ­லைத் தடுப்­ப­தற்­கான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் இங்­கி­லாந்து, வேல்ஸ், ஸ்காட்­லாந்து மக்­கள் நிம்­ம­திப் பெரு­மூச்சு விட்­டுள்­ள­னர்.

ஆனால் கிரு­மித்­தொற்று மீண்­டும் பர­வா­மல் இருக்க மக்­கள் தங்­க­ளு­டைய பங்கை ஆற்ற வேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இப்­போது மில்­லி­யன் கணக்­கான மக்­கள் வரம்­புக்கு உட்­பட்டு ஒன்­று­கூட முடி­யும். அன்­புக்­கு­ரி­ய­வர்­களை கட்­டித் தழுவ முடி­யும். மது­பா­னக் கூடங்­க­ளுக்­கும் உண­வ­கங்­க­ளுக்­கும் தாரா­ள­மா­கச் சென்று ­வ­ர­லாம்.

வெளி­நாட்டு பய­ணத்­திற்­கான தடை­யும் அகற்­றப்­பட்டு புதிய விதி­மு­றை­கள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன.

ஆனால் எல்­லா­ரும் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­பது அவ­சி­யம் என்று பிர­த­மர் ஜான்­சன் கூறி­யுள்­ளார்.

வாரத்­திற்கு இரு­முறை கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும் என்­று அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

"நமது பொது முடக்­கத்­திற்­கான பாதை­யில் நாம் அனை­வ­ரும் சேர்ந்து மற்­றொரு மைல்­கல்லை எட்­டி­யுள்­ளோம். ஆனால் ஒவ்வோர் அடி­யை­யும் எச்­ச­ரிக்ை­க­யு­டன் எடுத்து வைக்க வேண்­டும்," என்று பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

அழைக்கும்போதெல்லாம் வாரந்தோறும் பரிசோதனைகளைச் செய்து தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். கைகள், முகம், இடைவெளி, காற்று ஆகியவற்றை மறந்துவிடக் கூடாது என்றார் அவர்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் முழுவதும் முடக்கம் தளர்த்தப்பட்டாலும் ஒவ்வொரு நாட்டுக்கும் விதிமுறைகள் மாறுபடு கின்றன. ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ மற்றும் மோரேயில் உள்ளூர் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.