ஆஸி. கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்பினர்

ஆஸி. கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்பினர்

1 mins read
6f155633-1a63-4109-a96d-c1854cee82d8
சிட்னியில் விமானத்திலிருந்து டேவிட் ஹஸ்ஸி, ஸ்டீவ் ஸ்மித் இறங்குகின்றனர். படம்: 9 நியூஸ் காணொளி -

சிட்னி: கொவிட்-19 நெருக்­க­டி­யில் சிக்­கி­யுள்ள இந்­தி­யா­வி­லி­ருந்து தப்பி வெளி­யே­றிய ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் வீரர்­கள் மாலத்­தீவு வழி­யாக நாடு திரும்­பி­யுள்­ள­னர்.

இந்­திய பிரி­மி­யர் லீக்(ஐபிஎல்) போட்­டி­யில் அவர்­கள் விளை­யாடி வரு­கின்­ற­னர். ஆனால் கிரு­மித்­தொற்று பர­வு­வ­தால் இம்­மா­தம் ஐபி­எல் போட்­டிக்­குத் தடை விதிக்­கப்­பட்­டது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வும் இந்­தி­யா­வி­லி­ருந்து வரும் விமா­னங்­க­ளுக்­குத் தடை விதித்­துள்­ளது. இந்­தி­யா­வில் ஆயி­ரக்­க­ணக்­கான ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் சிக்­கி­யுள்ள வேளை­யில் இந்­தத் தடை அறி­விக்­கப்­ப­பட்­டது.

இத­னால் ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து இம்­மா­தம் 15ஆம் தேதி சர்ச்­சைக்­கு­ரிய தடையை ஆஸ்­தி­ரே­லியா விலக்­கிக்கொண்­டது. இதன் பிறகு இந்­தி­யா­வுக்கு விமா­னங்­களை அனுப்பி தமது நாட்டு மக்­க­ளை­அது மீட்டு வரு­கிறது.

இதற்கு முன்­ன­தா­கவே இம்­மாதம் 6ஆம் தேதி இந்தியாவிலிருந்து வெளியேறி மாலத்­தீவு சென்ற ஆஸ்­தி­ரே­லிய வீரர்­கள் பின்­னர் தனி­யார் விமானம் மூலம் சிட்னி வந்து சேர்ந்­துள்­ள­னர். முன்­னாள் ஆஸ்­தி­ரே­லிய அணித் தலை­வர் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்­னர், பேட் கம்­மின்ஸ் ஆகி­யோர் நாடு திரும்­பிய வீரர்­களில் சிலர். அவர்­கள் அனை­வ­ரும் 14 நாட்­கள் தனி­மையை நிறை­வேற்ற வேண்­டும்.