சிங்கப்பூரில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி போட ஒப்புதல்

சிங்கப்பூரில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி போட ஒப்புதல்

1 mins read
7d627a7f-4b4c-462f-ac6c-931dca0348ca
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு இணைத் தலைவரான அவர், சற்று முன்பு நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஒப்புதல் அளிக்க சுகாதார அறிவியல் ஆணையம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் தொடர்பிலான நிபுணர் குழு ஆதரவளித்துள்ளதாக அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்