கத்தோலிக்க பள்ளி மாணவருக்கு கிருமித்தொற்று

கத்தோலிக்க பள்ளி மாணவருக்கு கிருமித்தொற்று

1 mins read
e712359f-e351-4a07-b310-be45d23e704b
படம்: கூகல் வரைபடம் -

கத்தோலிக்கப் பள்ளியில் தொடக்கநிலை 2ல் பயிலும் மாணவருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

'லர்னிங் பாய்ண்ட்' துணைப்பாட நிலையத்தில் படித்த அந்த மாணவர் குறித்து இன்று தனக்குத் தெரியவந்ததாக பெற்றோருக்கு அப்பள்ளி கடிதம் அனுப்பியது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அக்கடிதத்தைப் பார்த்தது.

அந்த மாணவர் கடைசியாக மே 13ஆம் தேதி பள்ளியில் காணப்பட்டதாகவும் அப்போது அவர் உடல்நலத்துடன் இருந்தார் என்றும் அக்கடிதம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவருடன் அணுக்கமான தொடர்பிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேல் விவரங்கள் இருந்தால் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நேற்று வரையில் இந்த துணைப்பாட நிலைய குழுமத்துடன் தொடர்புடைய 20 தொற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 12 பேர் தொடக்கப்பள்ளி மாணவர்கள்.

குறிப்புச் சொற்கள்
மாணவர்கிருமித்தொற்று