தணியாத பதற்றம்; தொடரும் தாக்குதல்; பலன் தராத சண்டைநிறுத்த அழைப்பு

தணியாத பதற்றம்; தொடரும் தாக்குதல்; பலன் தராத சண்டைநிறுத்த அழைப்பு

2 mins read
4674d808-34ae-41ce-be03-c4a78065dcd6
இஸ்ரேலிய தாக்குதலால் சிதறுண்ட காஸா நகரின் அக்ஸா அவென்யூ வட்டாரம். படம்: ஏஎஃப்பி -

காஸா நகர்: சண்டை நிறுத்த அழைப்­பு­க­ளைப் புறந்­தள்ளி இஸ்­ரே­லி­யப் படை­யி­ன­ரும் பாலஸ்­தீன போரா­ளி­களும் சண்­டை­யைத் தொடர்ந்து வரு­கின்­ற­னர். திங்­கட்­கி­ழமை இரவு சில மணி நேரம் சண்டை ஓய்ந்­தி­ருந்த நிலை­யில் நள்­ளி­ர­வுக்­குப் பிறகு இரு­த­ரப்­பி­லும் தாக்­கு­தல் தொடங்­கி­ய­தாக செய்தி நிறு­வ­னங்­கள் தெரி­வித்­தன.

கரும்­பு­கை­யு­டன் கூடிய தீப்­பந்து ஒன்று நேற்று அதி­காலை காஸா கட்­ட­டம் ஒன்­றின் மீது விழுந்­த­தாக ஏஎ­ஃப்பி செய்­தி­யா­ளர் கூறி­னார். இஸ்­ரே­லின் ஆக அண்­மைய தாக்­கு­தல் இது என்­றும் அவர் குறிப் பிட்டார்.

வெடி­குண்டு தாக்­கு­தல்­களை உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு அைனத்­து­லக அழைப்­பு­கள் விடுக்­கப்­பட்டு வந்த நிலை­யில், "பயங்­க­ர­வா­தி­

க­ளைக் குறி­வைத்து தாக்­கு­தல் தொட­ரும்," என்று இஸ்­ரே­லி­யப் பிர­த­மர் பெஞ்­ச­மின் நெட்­டன்­யாகு திங்­கட்­கி­ழமை பின்­னே­ரத்­தில் கூறி­னார்.

அன்று நள்­ளி­ர­வுக்­குப் பின்­னர் காஸா மீது 65க்கும் மேற்­பட்ட வான்­தாக்­கு­தல்­களை இஸ்­ரே­லி­யப் படை­யி­னர் நடத்­தி­ய­தா­க­வும் எதிர்­மு­னை­யி­லி­ருந்து 90 ராக்­கெட்­டு­களை பாலஸ்­தீ­னப் போரா­ளி­கள் ஏவி­ய­தா­க­வும் பிபிசி செய்­தி­யா­ளர் கூறி­னார்.

தாக்­கு­தல்­க­ளின் விளை­வாக காஸா­வில் உள்ள கட்­ட­டங்­கள் பல எரிந்­தன. அவற்­றின் அரு­கில் இருந்த பல கட்­ட­டங்­கள் நில­ந­டுக்­கத்­தில் சிக்­கி­ய­தைப் போல குலுங்­கின.

ஆக அண்­மைய நில­வ­ரப்­படி, இஸ்­ரே­லிய வான் தாக்­கு­த­லில் 212 பாலஸ்­தீ­னர்­கள் காஸா­வில் கொல்­லப்­பட்டு உள்­ள­னர். இவர்­களில் 61 குழந்­தை­களும் அடங்­கும். அதே நேரம் பாலஸ்­தீன ஆயு­தக் குழு ஏவிய ராக்­கெட்­டு­க­ளால் இஸ்­ரே­லில் ஒரு குழந்தை உள்­ளிட்ட 10 பேர் மாண்­ட­னர். இரு­த­ரப்­பை­யும் சேர்ந்த அதி­கா­ரி­கள் தெரி­வித்த விவ­ரங்­கள் இவை என்று ஏஎ­ஃப்பி செய்­தி­யா­ளர் குறிப்­பிட்­டார்.

திங்­கட்­கி­ழமை இரவு திரு நெட்­டன்­யா­கு­வு­டன் தொடர்­பு­கொண்டு பேசிய அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், சண்டை நிறுத்­தத்­தைத் தாம் ஆத­ரிப்­ப­தாக அவ­ரி­டம் கூறி­னார். தொடர்ந்து, ஐக்­கிய நாடு­கள் பாது­காப்பு மன்­ற­மும் நேற்று அவ­ச­ரக் கூட்­டம் ஒன்­றுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தது.