புதிய தொற்று மரணங்களால் தைவானில் அதிர்ச்சி; இன்று முதல் பள்ளிகள் மூடல்

புதிய தொற்று மரணங்களால் தைவானில் அதிர்ச்சி; இன்று முதல் பள்ளிகள் மூடல்

2 mins read
322ed9f1-e7b3-41f9-ba10-58a72640488f
-

தைப்பே: பள்­ளிக்­கூ­டங்­கள் அனைத்­தும் இன்று புதன் கிழமை முதல் இம்­மா­தம் 28ஆம் தேதி வரை மூடப்­படும் என்று தைவான் அர­சாங்­கம் நேற்று அறி­வித்­தது. வகுப்பு களை இணையம் வழியாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. புதி­தா­கப் பதி­வான தொற்று எண்­ணிக்­கை சற்று குறை­வாக இருந்­த­போ­தி­லும் புதி­தாக இரு­வர் மர­ண­ம­டைந்­த­தைத் தொடர்ந்து கட்­டுப்­பா­டு­ களை தைவான் கடு­மை­யாக்­க தொடங்கி உள்­ளது.

புதிய கிரு­மிப் பர­வல் அலை கார­ண­மாக கடந்த வாரத்­தில் உள்­ளூ­ரில் கிட்­டத்­தட்ட 1,000 பேருக்கு தொற்று ஏற்­பட்­டது. அதன் கார­ண­மாக தலை­ந­கர் தைப்­பே­யில் கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வந்­தன.

புதிய தொற்று நில­வ­ரம் தைவா­னிய மக்­க­ளி­டம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

தொற்­றுப் பர­வ­லைத் திறம்­ப­டக் கையாண்டு, கொள்­ளை­நோயை கட்­டுக்­குள் வைத்­தி­ருந்த தைவா­னில் வழக்­க­நிலை படிப்­ப­டி­யா­கத் திரும்­பிக்கொண் ­டி­ருந்த வேளை­யில் புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பெருகி வரு­கின்­றன.

திங்­கட்­கி­ழமை உள்­ளூ­ரில் 333 பேருக்­குப் புதி­தாக கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில் நேற்று அந்த எண்­ணிக்கை சற்று குறைந்து 240 ஆனது.

மேலும், புதி­தாக இரு­வர் மாண்­ட­தைத் தொடர்ந்து அங்கு இது­வரை தொற்­றுக்­குப் பலி­யா­ன­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 14க்கு உயர்ந்­தது.

இந்த விவ­ரங்­களை நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரிவித்த தைவான் சுகா­தார அமைச்­சர் சென் ஷி-சுங், தொற்று எண்­ணிக்­கை­யில் சிறிய சரிவு ஏற்­பட்­டது தொற்­றுப் பர­வல் கட்­டுக்­குள் வந்­த­தா­கப் பொருள்

­ப­டாது என்­றார்.

இருப்­பி­னும், புதி­தா­கத் தொற்று ஏற்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­னோரிடம் இலே­சான பாதிப்­பு­களே உண­ரப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.