தோக்கியோ: ஜப்பானிய முதியவர் ஒருவர் தமது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கொரோனா நிதிச் சிக்கலைச் சமாளிக்க நன்கொடையாக வழங்கி உள்ளார். யோகோசுகா நகர மண்டபத்திற்கு நேற்று முன்தினம் சென்ற அவர், தமது முதுகுப் பையையும் கடிதத்தையும் நகர மேயரிடம் தர விரும்புவதாகக் கூறினார். அதிகாரிகள் அதற்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் அவரைக் காணவில்லை. பைக்குள் 60 மில்லியன் யென் (S$732,660) ரொக்கப் பணம் இருந்தது. கடிதத்தில், "நான் ஒன்றாம் வகுப்புப் படித்தது முதல் சேமித்த தொகை இதில் உள்ளது. இது ஒரு நன்கொடை," என்று இருந்தது.
வாழ்நாள் சேமிப்பை வழங்கிய 'வள்ளல்'
1 mins read
-

