நியூயார்க்: மியன்மாருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எல்லாவித ஆயுதக் கருவிகளையும் விற்க, விநியோகிக்க, மாற்றிவிடக் கூடிய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரும் வரைவுத் தீர்மானம் ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மீது ஐக்கிய நாடுகள் மன்ற பொதுச் சபையின் 193 உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வாக்களிக்க இருந்த நிலையில் வாக்களிப்பு திடீரென தள்ளிப்போடப்பட்டு உள்ளதாக மன்றப் பேராளர்கள் கூறி உள்ளனர்.
மறுபடியும் எப்போது வாக்களிப்பு நிகழும் என்ற அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் சில உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் பொருட்டு இந்நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக சில பேராளர்கள் தெரிவித்தனர்.

