துப்-பாக்-கி-யால் சுட்-டுக்-கொள்-வது போல் நடித்-த-வர் மாண்-டார்

துப்-பாக்-கி-யால் சுட்-டுக்-கொள்-வது போல் நடித்-த-வர் மாண்-டார்

1 mins read
9357fcb6-cea2-4b95-99ca-5103f8bd05be
-

பெஷா­வர்: சமூக ஊட­க­மான டிக்­டாக்­கில் பதி­வேற்­று­வ­தற்­காக தன்னைத் தானே சுட்­டுக்­கொள்­வது போல் நடித்த இளை­யர் உயி­ரி­ழந்த சோக சம்­ப­வம் பாகிஸ்­தா­னில் நடந்­துள்­ளது.

ஹமி­துல்லா, 19, உள்­ளூ­ரில் சமூக ஊட­கத்­தில் நன்கு அறி­யப்­பட்ட இளை­யர் ஆவார். நண்­பர்­க­ளு­டன் விளை­யாட்­டாக ஏமாற்­று­வது, கிரிக்­கெட் விளை­யா­டு­வது உள்­ளிட்ட காெணாளி­கள் அவ­ரு­டைய டிக்­டாக் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளன.

இவர் தனது நண்­ப­ரின் துப்­பாக்­கி­யில் குண்­டு­கள் போடப்­பட்­டி­ருந்­தது தெரி­யா­மல் நேராக தன் தலை­யில் வைத்து துப்­பாக்­கியை இயக்­கி­ய­தால் சம்­பவ இடத்­தி­லேயே மாண்­டு­விட்­ட­தாக போலி­ஸ் அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

எனவே, இந்தக் காணொளி டிக்­டாக்­கில் பதி­வேற்­றம் செய்­யப்­ப­ட­வில்லை என்­றா­லும் நண்­பர்­கள் தங்­க­ளுக்­குள் பகிர்ந்து கொண்­ட­தைத் தொடர்ந்து வெளி­யு­ல­கிற்கு அம்­ப­ல­மா­னது என்­றும் அவர் சொன்­னார்.