கோபன்ஹேகன்: கொரோனா
கிருமித்தொற்றுக்கு இருந்து எதிரான முன்னேற்றம் வலுவானதாக இல்லை மற்றும் அனைத்துலக பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா இயக்குநர் எச்சரித்துள்ளார். அதோடு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உருமாறி கொரோனா பரவலுக்கு எதிராக செயல்படுகின்றன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
"தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் புதிய நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ள நிலையில், நாம் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," என்று ஹான்ஸ் க்ளூக் கூறினார்.
இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கிருமித்தொற்று ஐரோப்பிய வட்டாரத்தின் 26 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அங்கு இதுவரை 23 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் 11 விழுக்காட்டினருக்கே இரண்டு தவணை தடுப்பூசியும் போடப்பட்டள்ளதாகவும் அவர் சொன்னார்.

