காஸா: இஸ்ரேல், காஸா இடையில் 11வது நாளாக சண்டை தொடர்ந்தபோதும், சில நாட்களுக்குள் அது முடிவுக்கு வரும் என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் கணித்திருக்கிறார்.
சண்டை நிறுத்தத்திற்கான வழியில் செயல்படுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் நேற்று முன் தினம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தினார்.
மத்தியஸ்தர்களின் உதவிக்குப் பிறகு போர்நிறுத்தத்திற்கு இரு தரப்பினரும் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டதாக எகிப்து வட்டாரம் கூறுகிறது. ஆனால் இன்னும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால், அது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தற்போதைய முயற்சிகளால் இன்னும் ஓரிரு நாட்களில் சண்டை நிறுத்தம் கொண்டு வரப்படும்," என்று லெபனான் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஹமாஸ் அரசியல் அதிகாரியான மூசா அபு கூறினார்.
சண்டை நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தை ஒருபக்கம் இருந்தாலும் இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
நேற்று நடந்த சண்டையின் போது இஸ்ரேல் படையினர் வான் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் இரண்டு வீடுகள் தரைமட்டமாகின. நால்வர் காயமடைந்தனர்.
பாலஸ்தீனர்களும் இஸ்ரேல் பகுதிக்குள் ஏவு
கணைகளை வீசி தாக்குதல்களைத் தொடர்ந்த
னர்.

