கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு தொடர்புடைய ஒரு வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 114 மில்லியன் ரிங்கிட்
(S$ 36.69 மில்லியன்) தொகை 1எம்டிபியின்
திருடப்பட்ட நிதியின் ஒரு பகுதி என்பதை நிரூபிக்க மலேசியா அரசு தவறிவிட்டதாகவும் அதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்புஅளித்தது.
நீதிபதி முஹம்மது ஜமீல் உசின் தனது வாய்வழி முடிவில், RM114 மில்லியனைத் திருப்பித் தர வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்த முடிவுக்கு வரவில்லை.
இந்த பணம், 26 வெவ்வேறு நாணயங்களில், 2018ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட 1.1 பில்லியன் ரிங்கிட் பொருட்களின் ஒரு பகுதியாகும்.
இந்த பட்டியலில் 6.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வைர நெக்லஸ், 51.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஹெர்ம்ஸ் பைகள் மற்றும் ரோலக்ஸ் டைம்பீஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கடி
காரங்கள் போன்ற ஆடம்பர பொருட்கள் இருந்தன.

