முடக்கநிலையை விரிவுபடுத்துகிறது ஜப்பான்

முடக்கநிலையை விரிவுபடுத்துகிறது ஜப்பான்

2 mins read
6db02774-ac12-4715-87ce-56ddbee1a05c
-

தோக்­கியோ: ஜப்­பா­னில் கொரோனா தொற்றுப் பர­வல் அதி­க­ரித்து வரு­கிறது. குறிப்­பாக ஒக்­கி­னவா தீவில் தீவி­ர­ம­டைந்து வரு­கிறது. அத­னை­ய­டுத்து அந்­தத் தீவுப் பகு­தி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய முடக்கநிலையை ஜப்­பான் விரி­வு­படுத்­தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அதே­வே­ளை­யில் தடுப்­பூசி போடும் பணி­யை­யும் முழு வீச்­சில் செயல்­ப­டுத்­து­வ­தற்கு மொடர்னா மற்­றும் அஸ்ட்­ரா­ஸெ­னிகா தடுப்­பூசி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு அந்­நாட்­டின் சுகா­தார ஒழுங்­கு­முறை ஆணை­யம் பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ளது.

இருப்­பி­னும் ஆஸ்ட்­ரா­ஸெ­னிகா தடுப்­பூசி பயன்­ப­டுத்­து­வ­தால் இரத்த உறைவு ஏற்­ப­டக்­கூ­டும் என்ற அச்­சத்­தால் அந்த மருந்­தைப் பயன்­பாட்­டுக்கு விநி­யோ­கிப்­பதை ஜப்­பான் மேலும் சில காலங்க­ளுக்­குத் தள்­ளி­வைக்­க­லாம் என்று ஜப்­பா­னின் ஊடகங்கள் சில கூறி­யுள்­ளன.

ஜப்­பான் கடந்த பிப்­ர­வரி மாத நடுப்­ப­கு­தி­யில் பைஃ­சர் தடுப்­பூசி போடும் பணி­யைத் தொடங்­கி­யது. இருப்­பி­னும், நாட்­டின் மொத்த மக்­கள் தொகை­யில் 3.9 விழுக்­காட்டு மக்­க­ளுக்கு மட்­டுமே தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. ஜப்­பா­னில் தடுப்­பூசி போடும் பணி, பெரிய, வளர்ந்த நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் மிக­வும் மெது­வாக நடை­பெற்று வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பிரிட்­டன், சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த மருந்துத் தயா­ரிப்பு நிறு­வ­னத்­தி­டம் இருந்து 120 மில்­லி­யன் தடுப்­பூசி மருந்­து­களை வாங்க ஜப்­பான் ஏற்­பாடு செய்­துள்­ளது. இது 60 மில்­லி­யன் பேருக்­குப் போது­மா­ன­தாக இருக்­கும். ஜப்­பா­னை உள்ளடக்கிய ஜி7 நாடு­களில் சில தொற்று நெருக்­க­டி­யில் இருந்து மீண்டு, நடப்­பி­லி­ருக்­கும் முடக்­க­நி­லையை நீக்குவதற்கான ஏற்­பா­டு­க­ளைத் தொடங்­கி­யுள்­ளன. ஆனால், ஜப்­பான் மட்­டும் தொற்­றின் நான்­கா­வது அலை­யின் அச்­சு­றுத்­த­லுக்கு ஆளாகி, முடக்­க­நி­லை­யில் இருந்து மீள­முடி­யா­மல் தவித்து வரு­கிறது.

ஜப்­பா­னில் இது­வரை தோக்கியோ உள்­ளிட்ட ஒன்­பது மாநி­லங்­களில் முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இப்­போது ஒக்­கி­னவா தீவில் முடக்­க­நி­லையை அறி­விக்­கும் அர­சாங்­கத்­தின் திட்­டத்தை அந்­நாட்டு மருத்­துவ நிபு­ணர்­கள் வர­வேற்­றுள்­ள­னர்.

ஜப்­பா­னில் இது­வரை 695,000 தொற்­றும், 12,000 கொவிட் மர­ணங்­களும் பதி­வா­கி­யுள்­ளன. இது பல நாடு­க­ளைக் காட்­டி­லும் குறை­வாக இருந்­தா­லும் அங்கு தொற்று அதி­க­ரிப்­பால் சுகா­தா­ரத்­துறை திணறி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.