'பி1617 கிருமித்தொற்றுக்கு எதிரான ஆற்றல் கொண்டது ஃபைசர்

'பி1617 கிருமித்தொற்றுக்கு எதிரான ஆற்றல் கொண்டது ஃபைசர்

2 mins read
1de9f3fc-b586-4153-8517-4ccba10334c1
-

இஸ்­தான்­புல்: உரு­மாற்­றக் கிரு­மி­யான பி1617க்கு எதி­ராக செயல்­படும் ஆற்­றல் ஃபைசர் தடுப்­பூசி மருந்­துக்கு உள்­ளது என்று பயோ­என்­டெக் நிறு­வ­னம் நேற்று தெரி­வித்­தது.

சீனா­வின் வூஹான் நக­ரில் முதன்­மு­த­லில் உரு­வா­ன­தா­கக் கூறப்­படும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று, பல நாடு­க­ளுக்­குப் பரவி உரு­மாற்­றம் பெற்­றுள்­ளது. அவ்­வ­கை­யில் தென்­னாப்­பி­ரிக்­கா­வில் பி.1.351 கிரு­மி­யும் இந்­தி­யா­வில் பி1617 கிரு­மி­யும் ஆக கொரோனா தொற்று உரு­மாற்­றம் பெற்­றுள்­ளது.

இந்­நி­லை­யில் பயோ­என்­டெக் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி உகுர் சாஹின், ஃபைசர் தடுப்­பூசி மருந்து பி1617 கிரு­மிக்கு எதி­ரா­கச் செயல்­படும் ஆற்­ற­லைக் கொண்­டது என்று ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கக் கூறி­யி­ருக்­கி­றார்.

தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­க­ளின் ரத்த பகுப்­பாய்வை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட ஒரு அறி­வி­யல் ஆய்­வ­றிக்­கை­யின் தர­வு­கள் இதைத் தெளி­வு­ப­டுத்­து­வ­தாக திரு சாஹின் கூறி­னார்.

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் கண்­ட­றி­யப்­பட்ட உரு­மா­றிய கொரோ­னா­வுக்கு எதி­ராக செயல்­படும் ஆற்­றலை ஃபைசர் கொண்­டுள்­ளது என முன்­ன­தாக நடத்­தப்­பட்ட ரத்த பகுப்­பாய்­வுச் சோத­னை­யில் 75 விழுக்­காடு செயல்­தி­றன் இருப்­பது தெரி­ய­வந்­தது. இது­வரை 30 வகை உரு­மா­றிய கிரு­மி­க­ளுக்கு எதி­ராக ஃபைசர் தடுப்­பூசி மருந்து சோதிக்­கப்­பட்­டுள்­ளது. அனைத்­துச் சோத­னை­க­ளி­லும் உரு­மா­றிய கிரு­மி­க­ளுக்கு எதி­ரான ஆற்­றலை ஃபைசர் கொண்­டுள்­ளது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக துருக்­கிய தொலைக்­காட்­சி ஒன்­றுக்கு அளித்த பேட்­டி­யின் போது திரு சாஹின் தெரி­வித்­தார். மேலும், ஃபைசர் தடுப்­பூசி தொற்­றுக்கு எதி­ராக 70 முதல் 75 விழுக்­காடு பாது­காப்பு தரும் என்று எதிர்­பார்ப்­ப­தாக அவர் கூறி­னார்.

பி1617.2 எனப் பெய­ரி­டப்­பட்ட உரு­மா­றிய கிரு­மித்­தொற்று முதன்­மு­த­லில் இந்­தி­யா­வில் கண்­ட­றி­யப்­பட்­டது. அது அந்த நாட்­டில் அதி­வே­க­மா­கப் பரவி அதி­க­மா­னோரை பலி­கொண்­டது.

மேலும் பல நாடு­க­ளுக்­கும் பரவி உலக நாடு­க­ளுக்கு பெரும் அச்­சு­றுத்­த­லைத் தந்­துள்­ளது.