அமெரிக்காவில் வெறுப்புணர்வுக் குற்றங்களுக்கு எதிராக புதிய சட்டம்

அமெரிக்காவில் வெறுப்புணர்வுக் குற்றங்களுக்கு எதிராக புதிய சட்டம்

1 mins read
aff0ff9c-b7d4-4de4-a864-97a4f17c38d8
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் வசிக்­கும் ஆசிய அமெ­ரிக்­கர்­க­ளுக்கு எதி­ராக வெறுப்­பு­ணர்­வுத் தாக்­கு­தல்­கள், வன்­மு­றை­கள் தொடர்­பான குற்­றங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

அவற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் அந்­நாடு, இரு தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் கடு­மை­யான சட்­டம் ஒன்றை இயற்­றி­யுள்­ளது.

அதற்­கான சடங்­கு­பூர்வ கையெ­ழுத்­தி­டும் நிகழ்ச்சி நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­தது. அந்­தப் புதிய சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான ஆவ­ணத்­தில் நேற்று முன்­தி­னம் அதி­பர் ஜோ பைடன் கையெ­ழுத்­திட்­டார்.

அப்­போது உரை­யாற்­றிய அதி­பர் பைடன், "சார்பு மற்­றும் வெறுப்­பு­ணர்­வுக் குற்­றங்­க­ளைத் தடுக்க நாங்­கள் கடப்­பாடு கொண்­டுள்­ளோம்," என்று பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­டம் உறு­தி­ய­ளித்­தார்.

"வெறுப்­பு­ணர்வை வெளிப்­ப­டுத்­தும் அமெ­ரிக்க மக்­க­ளின் மனதை நாம் மாற்ற வேண்­டி­யுள்­ளது.

"தனிப்­பட்ட ஒரு­சா­ரார் மீது வெறுப்­பு­ணர்­வைக் காட்­டு­வ­தற்­கான இடம் அமெ­ரிக்கா இல்லை. இது­போன்ற செயல்­க­ளைக் கண்­டு­கொள்­ளாமல் இது இப்­ப­டித்­தான் என்று அப்­ப­டியே விட்­டு­விட முடி­யாது.

"இவற்­றைக் கண்­டு­கொள்­ளா­மல் மௌனம் சாதித்­தால், அந்த மௌனம் இது­போன்ற செயல்­க­ளுக்குத் துணை­போ­வ­தா­கவே கரு­தப்­படும்.

"இது­போன்ற வன்­மு­றை­க­ளைக் கண்­டும் காணா­மல் அமைதி காப்­பது என்­பது நாமும் அதற்கு உடந்­தை­யாக இருப்­ப­தைப் போன்­றதே.

"வன்­மு­றை­யைக் கண்டு நாம் அமை­தி­காக்­கும் ஒவ்­வொரு முறை­யும் வெறுப்­பு­ணர்வு வளர்­வ­தற்கு வழி அமைத்­துக் கொடுக்­கி­றோம். அவ்­வாறு செய்­வ­தால் நாமெல்­லாம் ஒரு நாடு என்­ப­தை நாமே பொய்­யாக்­கு­கிறோம்," என்று கூறி­னார் அதி­பர் பைடன்.