மலேசியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை மே 19ஆம் தேதி புதிய உச்சம்

மலேசியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை மே 19ஆம் தேதி புதிய உச்சம்

1 mins read
b373ab8a-9726-47ee-86e8-e9a96c8c2dc7
படம்: தி ஸ்டார் -

மலேசியாவில் கடந்த புதன்கிழமை (மே 19) ஒரே நாளில் ஆக அதிகமாக 80,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.

கொவிட்-19 தடுப்பூசி விநியோகம் தொடர்பில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு ஒன்று வெளியிட்ட ஆக அண்மைய தகவலின்படி, மலேசியாவில் கடந்த புதன்கிழமை 83,648 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

அந்த சிறப்புக் குழு, மக்களுக்குத் தடுப்பூசி போடப்படும் தினசரி எண்ணிக்கையை இவ்வாண்டு மார்ச் 2ஆம் தேதி வெளியிடத் தொடங்கியது. அந்த வகையில், கடந்த புதன்கிழமைதான் ஆக அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

அன்றைய தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட 83,648 பேரில் 49,722 பேர் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். எஞ்சிய 33,926 பேர் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.

மலேசியாவில் இந்த மாதம் 2ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கை வேகமெடுக்கத் தொடங்கியது. ஆனால், நோன்புப் பெருநாள் விடுமுறையின்போது அந்த எண்ணிக்கைய சரியத் தொடங்கியது. அதன் பின்னர், கடந்த புதன்கிழமை ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது.

மலேசியாவில் இதுவரை மொத்தம் 2.2 மில்லியன் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்