'இந்திய வகை கிருமி' எனக் குறிப்பிடும் சமூக வலைத்தள பதிவுகளை நீக்க இந்திய அரசு உத்தரவு

'இந்திய வகை கிருமி' எனக் குறிப்பிடும் சமூக வலைத்தள பதிவுகளை நீக்க இந்திய அரசு உத்தரவு

1 mins read
be7a2370-aaed-40f2-bf18-061c2fff9476
சென்னையில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆடவர். படம்: ஏஎஃப்பி -

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B1617 கொரோனா கிருமியை புதிய வகை என்று மட்டுமே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் பெயரை சேர்த்து வெளியான பதிவுகளை நீக்குமாறு இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை சமூக ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு இத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், 'இந்திய வகை கிருமி' என்று குறிப்பிடுவதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இந்தப் பெயரில் உள்ள பதிவுகள் அனைத்தையும் உடனடியாக நீக்க வேண்டும். உருமாறிய கொரோனா கிருமியை இந்தியாவின் பெயரை இணைத்து குறிப்பிடுவது முற்றிலும் தவறானது," என்று கூறியது.

குறிப்புச் சொற்கள்