அடுத்த ஆண்டு விடைபெறும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

அடுத்த ஆண்டு விடைபெறும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

1 mins read
2a1c0a92-c4db-48b6-8407-c7adf16c2e22
படம்: ராய்ட்டர்ஸ் -

இணையத்தளத்தில் நாம் உலாவ உதவி செய்து வருவது 'வெப் பிரவ்சர்'கள்தான். அந்த வகையில் கடந்த 1995ஆம் ஆண்டு வாக்கில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த பிரவ்சர் 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்'.

அறிமுகமான காலம் முதலே கடந்த 2004 வரை தனிக்காட்டு ராஜாவாக இணைய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்தது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான். அப்போதிருந்த சந்தை பயன்பாட்டில் 95 விழுக்காடு பயனர்கள் இந்த பிரவ்சரைதான் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் 'ஃபயர்பாக்ஸ்' மற்றும் 'கூகல் குரோம்' பிரவ்சர் உள்ளிட்ட பிரவ்சர்களின் வரவினால் தனது இருப்பிடத்தை இழக்கத் தொடங்கியது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். இதன் ஆமை வேக செயல்பாடு குறித்து மீம்ஸ் போட்டு இணையவாசிகள் கலாய்க்கத் தொடங்கினர்.

இதையடுத்து அடுத்த ஆண்டு ஜூன் 15க்கு பிறகு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சில 'விண்டோஸ் 10' வெர்ஷன் கொண்ட கணினிகளில் இயங்காது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு மாற்றாக மைக்ரோசாஃப்ட் 'எட்ஜ் பிரவ்சர் இருக்கும் எனவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.