'அவசரநிலை ஏற்பட்டாலும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் நடைபெறும்'

'அவசரநிலை ஏற்பட்டாலும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் நடைபெறும்'

1 mins read
10f6a0ed-f141-4233-83ae-0bec978950cf
-

தோக்­கியோ: கொவிட்-19 கார­ண­மாக தோக்­கியோ நக­ரில் அவ­ச­ர­நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டா­லும் ஒலிம்­பிக்ஸ் விளை­யாட்­டு­கள் திட்ட­மிட்­டப்­படி நடை­பெ­றும் என்று அனைத்­து­லக ஒலிம்­பிக்ஸ் குழு­வின் துணைத் தலை­வர் ஜான் கோட்ஸ் கூறி­யுள்­ளார்.

விளை­யாட்­டு­கள் தொடங்க இன்­னும் ஒன்­பதே வாரங்­கள் உள்ள நிலை­யில், ஏற்­கெ­னவே கொள்­ளை­நோய் சூழ­லால் நெருக்­க­டி­யில் திண­றும் நாட்­டின் மருத்­துவ அமைப்­பு­முறை மீது, தோக்­கியோ ஒலிம்­பிக்ஸ் விளை­யாட்­டு­க­ளால் பாரம் அதி­க­ரிக்­கும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

இப்­ப­தற்­ற­நி­லை­யைக் களை­வ­தில் அனைத்­து­லக ஒலிம்­பிக்ஸ் குழு கவ­னம் செலுத்தி வரு­கிறது.

ஒலிம்­பிக்ஸ் விளை­யாட்­டு­க­ளுக்­குத் தயா­ரா­கும் பணி­கள் தொடர்­பில் நடை­பெற்ற மூன்று நாள் இணை­யச் சந்­திப்­புக் கூட்­டத்­தில் குழு இவ்­வாறு தெரி­வித்­தி­ருந்­தது.

விளை­யாட்­டு­கள் நடை­பெ­று­வ­தற்­குப் பொது­மக்­கள் பெரும் கண்­ட­னம் தெரி­வித்து வரு­கின்­ற­னர். விளை­யாட்­டு­க­ளைத் தள்ளி வைக்க வேண்­டும் அல்­லது ரத்து செய்­ய­வேண்­டும் என்று ராய்ட்­டர்ஸ் நடத்­திய ஆய்வு ஒன்­றில் கிட்­டத்­தட்ட 70 விழுக்­காட்­டி­னர் கூறி­ இருந்­த­னர்.

ஒலிம்­பிக்ஸ் ஜூலை 23ஆம் தேதி­யன்று தொடங்­கு­வ­தற்கு முன்­ன­தா­கவே ஒலிம்­பிக் வளா­கத்­தில் உள்­ள­வர்­களில் குறைந்­தது 80 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டி­ருக்­கும் என்­றார் கோட்ஸ். விளை­யாட்டு வீரர்­கள், ஜப்­பான் மக்­கள் ஆகி­யோ­ரது பாது­காப்பு, ஆரோக்­கி­யம் இரண்­டை­யும் கருத்­தில் கொண்டு அனைத்து திட்­டங்­களும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட தயா­ராக உள்­ள­தாக அவர் விவ­ரித்­தார்.

இது­வரை, ஜப்­பான் அதன் மக்­களில் 4.1 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே தடுப்­பூசி போட்­டுள்­ளது.