இலங்கை, நேப்பாளத்தில் கொவிட்-19 தடுப்பூசித் தட்டுப்பாடு

டாக்கா: இலங்கை, நேப்­பா­ளம், பங்­ளா­தேஷ் ஆகிய நாடு­களில் போது­மான எண்­ணிக்­கை­யில் கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் இல்­லாத அபாய நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர். வருத்­தும் கொள்­ளை­நோய் அலை­யைச் சமா­ளிப்­ப­தற்­கான தெற்­கா­சி­யா­வின் முயற்­சி­க­ளுக்கு சீனா­வும் ரஷ்­யா­வும் கைகொ­டுக்க முன்­வ­ர­வேண்­டும் என்ற நம்­பிக்­கை­யில் அவை உள்­ளன. மூன்று நாடு­க­ளி­லும் தடுப்­பூசித் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தும் வேகம் குறைந்­துள்ள நிலை­யில் அவை தடுப்­பூ­சிக்­காக அனைத்­து­ல­கச் சந்­தை­களை நாடிச் செல்­கின்­றன.

கிட்­டத்­தட்ட 21 மில்­லி­யன் மக்­கள்­தொகை கொண்­டுள்ள இலங்­கை­யில் சுமார் 115,000 தடுப்­பூசி அள­வு­களே எஞ்­சி­யுள்­ளன. இந்­தி­யா­வி­ட­மி­ருந்து 13.5 மில்­லி­யன் 'கொவி­ஷீல்டு' தடுப்­பூசி அள­வு­களை இலங்கை வாங்­கு­வ­தாக இருந்த நிலை­யில், இந்­தி­யா­வின் தடுப்­பூசி ஏற்­று­மதி தடை கார­ண­மாக அதன் அன்­றாட தடுப்­பூசி எண்­ணிக்­கை­யைக் குறைத்­தது.

நேப்­பா­ளத்­தில் கிட்­டத்­தட்ட 1.5 மில்­லி­யன் பேர் தங்­க­ளின் இரண்­டா­வது 'கொவி­ஷீல்டு' தடுப்­பூ­சிக்­காக காத்­தி­ருக்­கின்­ற­னர். சீனா வழங்­கிய 'சினோ­ஃபார்ம்' தடுப்­பூசியைக் கொண்டே நேப்­பா­ளம் அதன் தடுப்­பூ­சித் திட்­டத்­தைச் சமா­ளித்து வரு­கிறது. பங்­ளா­தேஷுக்­கும் அதே கதி. இந்­தி­யா­வி­ட­மி­ருந்து 30 மில்­லி­யன் 'கொவி­ஷீல்டு' தடுப்­பூசி அள­வு­கள் பெறு­வ­தாக இருந்­தது. ஆனால் ஏழு மில்­லி­யனை மட்­டுமே அது பெற்­றுள்­ளது. அதற்­குள் இந்­தி­யா­வின் ஏற்­று­ம­தித் தடை நடப்­புக்கு வந்­து­விட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!