மலேசியா: தொற்று எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியது

மலேசியா: தொற்று எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியது

2 mins read
d8196111-b107-4097-b579-7f711d8bb263
-

கோலா­லம்­பூர்: மேலும் 6,320 பேருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­ப­தாக மலே­சியா நேற்று அறி­வித்­தது. இத்­து­டன் நாட்­டின் மொத்த கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை 505,115ஐ எட்­டி­யுள்­ளது.

அத்­து­டன் ஒரே நாளில் 50 பேர் கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­துள்­ள­னர். இது­வரை மலே­சி­யா­வில் மொத்­தம் 2,199 பேர் கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

தொடர்ந்து சிலாங்­கூ­ரில் ஆக அதி­க­மான கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன. நேற்று அங்கு 1,647 சம்­ப­வங்­கள் உறு­தி­செய்­யப்­பட்­டன. இரண்­டா­வது இடத்­தில் சர­வாக் மாநி­ல­மும் மூன்­றா­வது இடத்­தில் கோலா­லம்­பூ­ரும் இடம்­பெற்­றுள்­ளன.

கடந்த நான்கு நாட்­க­ளாக பதி­வா­கும் புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 6,000க்கும் மேலா­கவே உள்­ளது. வியா­ழக்­கி­ழ­மை­யன்று பதி­வான 6,806 சம்­ப­வங்­களும் 59 உயி­ரி­ழப்­பு­க­ளுமே ஆக அதி­கம் என்று கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில் மக்­கள் ஈர­டுக்கு முகக்­க­வ­சம் அணி­ய­லாம் என்று நேற்று பரிந்­துரை செய்­தார் சுகா­தா­ரத் துறை தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா.

'பதற்­றத்­தில் பொருட்­கள் வாங்கி

குவிப்­ப­தைத் தவிர்க்­க­வும்'

மலே­சி­யா­வில் கொவிட்-19 தொடர்­பில் மேம்­ப­டுத்­தப்­பட்ட நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள், மே 25 முதல் மேலும் கடு­மை­யா­க­வுள்­ளன. இதற்­கி­டையே, அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் தேவை­யான அள­வில் இருப்­ப­தா­கக் கூறி­யுள்­ளது அந்­நாட்டு உள்­ளூர் வர்த்­தக, பய­னீட்­டா­ளர் விவ­கார அமைச்சு.

எனவே, பதற்­றத்­தில் அள­வுக்கு அதி­க­மான பொருட்­களை வாங்க வேண்­டாம் என்று அது அறி­வு­றுத்தி­ உள்­ளது.

'எம்­சிஓ 3.0' எனப்­படும் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு நடப்­பில் இருக்­கும் கால­கட்­டத்­திற்­குத் தேவை­யான இருப்­பு­கள் நாட்­டில் உள்­ள­தென அமைச்­சின் அம­லாக்க இயக்­கு­நர் அஸ்­மான் அதாம் கூறி­னார்.

பொருட்­களை அள­வுக்கு அதி­க­மா­கப் பய­னீட்­டா­ளர்­கள் வாங்­கி­னால் விநி­யோ­கத் தடை ஏற்­பட்­டு­வி­டும் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார்.

இதற்­கி­டையே நாட்­டின் விநி­யோ­கத் தொடர், அமைச்­சால் கண்­காணிக்­கப்­பட்டு வரு­வ­தால் 'எம்­சிஓ 3.0' கால­கட்­டத்­தி­லும் அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களில் தட்­டுப்­பாடு ஏற்­ப­டாது என்ற நம்­பிக்கை பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு ஏற்­படும் என்று கூறப்­பட்­டது.

இருப்­பி­னும், சில்­லறை வர்த்­த­கர்­கள், மொத்த வியா­பா­ரி­கள், விநி­யோ­கிப்­பா­ளர்­கள் ஆகி­யோர் இந்­தச் சூழ­லைத் தங்­க­ளுக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு பொருட்­க­ளின் விலையை உயர்த்­து­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என்­றார் ஜோகூர் பய­னீட்­டா­ளர் இயக்­கச் சங்­கத்­தின் தலை­வர் முகம்­மது சலே சடிஜோ.

நம்­பிக்கை அளிக்­கும்

ஒரு நாள் தடுப்­பூசி விகி­தம்

இதற்­கி­டையே புதன்­கி­ழ­மை­யன்று மலே­சி­யா­வில் ஒரே நாளில் ஆக அதி­க­மாக 80,000க்கும் அதி­க­மா­னோ­ருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டது.

கொவிட்-19 தடுப்­பூசி விநி­யோ­கம் தொடர்­பில் அமைக்­கப்­பட்ட சிறப்­புக் குழு ஒன்று வெளி­யிட்ட தக­வ­லின்­படி, புதன்­கி­ழ­மை­யன்று 83,648 பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டது.

அன்­றைய தினம் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 83,648 பேரில் 49,722 பேர் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­ட­வர்­கள் என்­றும் எஞ்­சிய 33,926 பேர் தங்­க­ளின் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­வர்­கள் என்­றும் கூறப்­பட்­டது.

மலே­சி­யா­வில் இந்த மாதம் 2ஆம் தேதி முதல் தடுப்­பூசி போடும் விகி­தம் அதி­க­ரித்­தது. ஆனால், நோன்­புப் பெரு­நாள் விடு­மு­றை­யின்­போது அந்த விகி­தம் சரி­யத் தொடங்­கி­யது.