லண்டன்: இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட B16172 உருமாறிய கொரோனா தொற்றுக்கு ஃபைசர்-பயோஎன்டெக், ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை இருமுறை போட்டுக்கொள்வது திறம்பட செயல்படுவதாக 'பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து' (பிஎச்இ) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
கென்டில் முதலில் கண்டு
பிடிக்கப்பட்ட B117 உருமாறிய கொரோனா வகையிலிருந்து B1617-2 மிகக் குறைந்த அளவே வேறுபடுவதாகவும் அது குறிப்பிட்டது.
"மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், இறப்பு போன்றவற்றைத் தடுக்க தடுப்பூசிகள் இன்னும் கொஞ்சம் திறன்மிகுந்தவையாக இருக்கலாம்," எனக் குறிப்பிட்ட பிஎச்இயின் நோயெதிர்ப்பு பிரிவுத் தலைவர் டாக்டர் மேர் ராம்சே, உருமாறிய கொரோனா கிருமித்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்றார்.
B16172 உருமாறிய கொரோனா தொற்றுக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசி 88%, ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசி 60% திறனுடன் செயல்
படுவது தெரியவந்துள்ளது.

