தாய்லாந்து: கால்நடைகளுக்கு புதிய தொற்று, நடமாட்டக் கட்டுப்பாடு

தாய்லாந்து: கால்நடைகளுக்கு புதிய தொற்று, நடமாட்டக் கட்டுப்பாடு

1 mins read
32ddfe2a-cec6-4bec-b957-6632b7711659
-

பேங்காக்: கால்நடைகளை புதிய கிருமி தாக்குவதால் ஆடு, மாடு, எருமை போன்ற விலங்குகள் இடம் பெயரக்கூடாதென கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கிடையே இந்தக் கிருமிப் பரவலைத் தடுக்கவே இந்தக் கடும் கட்டுப்பாடு நேற்று விதிக்கப்பட்டது. கால்நடைகளின் தோலில் கட்டிகளை இந்த வைரஸ் ஏற்படுத்துவதுடன் அவற்றின் பால் உற்பத்தியும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஈக்கள், கொசுக்களால் பரவும் இந்த நோய் தாய்லாந்தில் புதிதாகப் பரவினாலும் அதனால் ஏற்கெனவே 6.700 கால்நடைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த நோயால் கால்நடைகள் உயிரிழப்பது அரிது என்று கூறப்படுகிறது. அண்டை நாடுகளிலிருந்து கால்நடைகளைக் கடத்தி வரப்படுவதாலும் உள்நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு இல்லாததாலும் இதுபோன்ற நோய்கள் பரவுவதாக அரசாங்கத்தின் துணைப் பேச்சாளார் டிரைசுலீ டிரைசரனாகுல் தெரிவித்தார். அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி அங்கு 707,000 பசு மாடுகளும் 6.2 மில்லியன் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகளும் 1.2 மில்லியன் எருமைகளும் உள்ளன.