பெய்ஜிங்: கங்சு மாகாணத்தின் கரடுமுரடான பாதைகளில் 100 கி.மீ. தூர 'அல்ட்ராமாரத்தான்' நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் மஞ்சளாற்றங்கரையின் ஒரு வளைவுப் பகுதியில் தொடங்கியது.
குன்றுகள், கணவாய் போன்றவை உள்ளிட்ட பகுதிகளில் போட்டியாளர்கள் ஓட வேண்டும். பிற்பகல் நேரத்தில் போட்டி
யாளர்கள் செல்லும் பகுதி ஒன்றில் பனிமழை பொழிந்ததால் அங்கு வெப்பநிலை வெகுவாகக் குறைந்து கடுங்குளிர் நிலவியது. தொடர்ந்து அந்தப் பகுதியில் வலுவான பனிக் காற்றும் வீசியது. நிலைமை மோசமடைந்ததால் சில பங்கேற்பாளர்கள் கிளம்பிய இடத்துக்கே திரும்பினர். அதனையடுத்து, கிட்டத்தட்ட 1,000 மீட்புப் படையினர் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பனிப்பொழிவுக்குப் பிறகு அந்தப் பகுதியில் ஏற்பட்ட ஒரு நிலச்சரிவு மீட்புப் பணி
களைத் தாமதப்படுத்தியது. அந்தப் பகுதியில் வெப்பநிலை 6 டிகிரி செல்சியசாக இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி, பங்கேற்ற 172 பேரில் 151 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் 21 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்
படாததாலும் பேரிடர் மீட்பு நடைமுறை இல்லாததாலும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக ஏற்பாட்டாளர்களை கோபத்துடன் திட்டித் தீர்த்தனர் சமூக ஊடகவாசிகள்.

