தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடுங்குளிரில் மாரத்தான்; பங்கேற்றவர்களில் 21 பேர் பலி

1 mins read
c1261e63-7aef-4259-98ba-995bb17471f3
-

பெய்­ஜிங்: கங்சு மாகா­ணத்­தின் கர­டு­மு­ர­டான பாதை­களில் 100 கி.மீ. தூர 'அல்ட்­ரா­மா­ரத்­தான்' நேற்று முன்­தி­னம் காலை 9 மணி­ய­ள­வில் மஞ்­ச­ளாற்­றங்­க­ரை­யின் ஒரு வளை­வுப் பகுதியில் தொடங்­கி­யது.

குன்­று­கள், கண­வாய் போன்­றவை உள்­ளிட்ட பகு­தி­களில் போட்­டி­யா­ளர்­கள் ஓட வேண்­டும். பிற்­ப­கல் நேரத்­தில் போட்­டி­

யா­ளர்­கள் செல்­லும் பகுதி ஒன்­றில் பனி­மழை பொழிந்­த­தால் அங்கு வெப்­ப­நிலை வெகு­வா­கக் குறைந்து கடுங்­கு­ளிர் நில­வி­யது. தொடர்ந்து அந்­தப் பகு­தி­யில் வலு­வான பனிக் காற்­றும் வீசி­யது. நிலைமை மோச­ம­டைந்­த­தால் சில பங்­கேற்­பா­ளர்­கள் கிளம்­பிய இடத்­துக்கே திரும்­பி­னர். அத­னை­ய­டுத்து, கிட்­டத்­தட்ட 1,000 மீட்­புப் படை­யி­னர் அங்கு பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

பனிப்­பொ­ழி­வுக்­குப் பிறகு அந்­தப் பகு­தி­யில் ஏற்­பட்ட ஒரு நிலச்­ச­ரிவு மீட்­புப் பணி­

க­ளைத் தாம­தப்­ப­டுத்­தி­யது. அந்­தப் பகு­தி­யில் வெப்­ப­நிலை 6 டிகிரி செல்­சி­ய­சாக இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. நேற்று காலை 9 மணி நில­வ­ரப்­படி, பங்­கேற்ற 172 பேரில் 151 பேர் பாது­காப்­பாக இருப்­ப­தா­கவும் 21 பேர் பலியானதாகவும் தெரி­விக்­கப்­பட்­டது.

பாது­காப்பு ஏற்­பா­டு­கள் சரி­வர செய்­யப்­

ப­டா­த­தாலும் பேரிடர் மீட்பு நடைமுறை இல்லாததாலும் இந்த உயி­ரி­ழப்புகள் ஏற்­பட்­ட­தா­க­ ஏற்­பாட்­டா­ளர்­களை கோபத்துடன் திட்டித் தீர்த்தனர் சமூக ஊடகவாசிகள்.