ஃபைசர் தடுப்பூசியை சாதாரண குளிர்பதனப் பெட்டி வெப்பநிலையில் ஒரு மாதகாலம் வரை சேமித்து வைக்க ஒப்புதல்

ஃபைசர் தடுப்பூசியை சாதாரண குளிர்பதனப் பெட்டி வெப்பநிலையில் ஒரு மாதகாலம் வரை சேமித்து வைக்க ஒப்புதல்

1 mins read
9ebbd925-14b4-4223-bbeb-d5c241d53562
-

ஃபைசர் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசியை 2க்கும் 8 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்ட சாதாரண குளிர்பதனப் பெட்டி வெப்பநிலையில் ஒரு மாதகாலம் வரை சேமித்து வைக்க சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

சிங்கப்பூரின் தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டத்தை ஒருங்கிணைக்க இந்த நடவடிக்கை உதவும். அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத் துறை கடந்த வாரம் இதுபோன்ற முடிவு எடுத்திருந்ததைத் தொடர்ந்து சுகாதார அறிவியல் ஆணையத்தின் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கான நிபந்தனைகள் அப்போது கடுமையானதாக இருந்தன.

உறைநிலைக்குக் கீழ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அந்தத் தடுப்பூசியை சேமித்து வைக்க வேண்டியிருந்தது. சாதாரண குளிர்பதனப் பெட்டி வெப்பநிலையில் ஐந்து நாட்கள் வரை தடுப்பூசியை சேமித்து வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர், ஃபைசர் தடுப்பூசியை சாதாரண உறைவூட்டி வெப்பநிலையில் (உறைநிலைக்குக் கீழ் 20 டிகிரி செல்சியஸ்) இரு வாரங்கள் வரை சேமித்து வைக்கலாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் பிப்ரவரியில் தெரிவித்திருந்தது.

தடுப்பூசியை சேமித்து வைப்பதன் தொடர்பில் ஃபைசர் நிறுவனம் சமர்ப்பித்த தரவுகளை மறுஆய்வு செய்ததன் அடிப்படையில் இப்போது இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக ஆணையம் இன்று (மே 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.