மலேசியா: ஒருநாள் தொற்று 7,000ஐ கடந்தது

மலேசியா: ஒருநாள் தொற்று 7,000ஐ கடந்தது

1 mins read
0fb25c83-468f-443d-ae27-15dd352c2254
-

மலேசியாவில் 24 மணி நேரத்தில் 7,289 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கிருமிப் பரவல் தொடங்கியது முதல் மலேசியாவில் ஒரே நாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது. மேலும் முதல்முறையாக தொற்று எண்ணிக்கை 7,000ஐ கடந்துள்ளது.

இரு நாட்களுக்கு முன்னர் 6,976 என தொற்று எண்ணிக்கை பதிவானதே ஒரே நாளில் மலேசியாவில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை எனக் கருதப்பட்ட நிலையில் இன்று அது மேலும் அதிகரித்தது.

தொடர்ச்சியாக ஏழு நாட்கள் 6,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

மலேசியாவில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 525,889ஆக அதிகரித்துவிட்டது.

மூன்றாம் கட்ட கிருமிப் பரவலை எதிர்த்து மலேசியா போராடி வருகிறது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைகளில் உள்ள தீவிரக் கண்காணிப்புப் பிரிவுகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகிருமித்தொற்று