அமெ-ரிக்-கா-வின் அறிக்கை சீனா-வின் வூஹான் ஆய்-வ-கத்-தில் இருந்து கொவிட்-19 பர-வி-யி-ருக்-கக்-கூ-டும்

அமெ-ரிக்-கா-வின் அறிக்கை சீனா-வின் வூஹான் ஆய்-வ-கத்-தில் இருந்து கொவிட்-19 பர-வி-யி-ருக்-கக்-கூ-டும்

2 mins read
77983358-4e29-4c80-8f25-fa306bb1220a
-

வாஷிங்­டன்: சீனா கொவிட்-19 கொள்­ளை­நோய் பற்றி உல­கிற்கு அறி­விப்­ப­தற்கு சில மாதங்­கள் முன்பே, வூஹான் ஆய்­வக ஆராய்ச்­சி­யா­ளர்­கள் மூவர் மருத்­துவ உத­வியை நாடி­ய­தாக வெளி­யி­டப்­ப­டாத அமெ­ரிக்க உள­வுத்­து­றை­யின் அறிக்­கையை மேற்­கோள்­காட்டி வால் ஸ்தி­ரீட் செய்தித்தாள் தெரி­வித்­துள்­ளது.

சீனா­வில் முதல் தொற்று சம்­ப­வம் 2019 டிசம்­பர் மாதம்­தான் பதி­வா­னது என்­றும் கொரோனா கிருமி வூஹான் ஆய்­வ­கத்­தில் உரு­வா­க­வில்லை என்­றும் சீனா மறுத்து வரும் நிலை­யில், 2019ஆம் ஆண்டு நவம்­பர் மாதமே வூஹான் ஆய்­வக ஆராய்ச்­சி­யா­ளர்­கள் உடல்­ந­லக் குறை­வால் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­ற­தா­கக் கூறு­கிறது அந்த அறிக்கை.

மேலும் அந்த ஆய்­வ­கத்­தில் இருந்த எத்­தனை ஆராய்ச்­சி­

யா­ளர்­கள் பாதிக்­கப்­பட்­ட­னர், அவர்­கள் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த காலம், மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று வந்த தக­வல்­கள் குறித்து அமெ­ரிக்க உள­வுத் துறை அறிக்­கை­யில்

தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, வூஹான் ஆய்­வ­கத்­தில் இருந்­து­தான் கிருமி பர­வி­யி­ருக்­கக்­கூ­டும் என்ற சந்­தே­கத்தை இது வலுப்­ப­டுத்­தும் வகை­யில் உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

கொவிட்-19 எப்­படி உரு­வா­னது என்­பது குறித்து உலக சுகா­தார அமைப்பு அடுத்த கட்ட விசா­ர­ணையை தொடங்­க­வுள்ள நிலையில், இந்த அறிக்­கையை அமெ­ரிக்கா வெளி­யிட்­டுள்­ளது.

அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு மன்­றத்­தின் பேச்­சா­ளர் நாளி­த­ழின் இந்த அறிக்கை பற்றி கருத்து எது­வும் கூற­வில்லை என்­றா­லும் பைடன் நிர்­வா­கம் கொவிட்-19

கிரு­மித்­தொற்று எப்­படி உரு­வா­னது என்­ப­தைத் தெரிந்து கொள்­வ­தில் தீவி­ர­மாக உள்­ள­தா­கச் சொன்­

னார்.

இதற்­கி­டையே, இது­கு­றித்து பதி­ல­ளித்த சீன வெளி­யு­றவு அமைச்சு, வூஹான் ஆய்­வ­கத்­தில் இருந்து வெளி­யாகி இருக்­க­லாம் என்­பதை அமெ­ரிக்கா தொடர்ந்து மிகைப்­ப­டுத்தி பேசி வரு­கிறது என்று சாடி­யது.