கோலாலம்பூர்: மலேசியாவில் அன்றாட கிருமித்தொற்று சம்பவங்
களின் எண்ணிக்கை தொடர்ந்து 6,000த்திற்கும் மேலாகவே பதிவாகி வருகிறது.
முழு முடக்க நிலை அறிவிக்கப்பட வில்லை என்றாலும், இன்று முதல் அங்கு கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப் பட்டுள்ளது.
சென்ற ஆண்டு கிருமிப் பரவலின்போது, முழு முடக்க உத்தரவால், கிருமித்தொற்றை மலேசியா வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தது.
ஆனால், மீண்டும் ஒரு முழுமையான நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அதனைச் செயல்படுத்த அரசாங்கம் மறுத்து வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் 362 பேர் தொற்றுக்குப் பலியாகினர். இது கடந்த ஆண்டின் 11 மாதங்களில் ஏற்பட்ட மரணத்திற்கு சமம்.
நேற்று மலேசியாவில் 6,509 பேர் தொற்றுக்கு ஆளாகினர். 20 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவார்கள்.
இதற்கிடையே நேப்பாளம், பங்ளாதேஷ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு தெற்காசிய நாடுகளில் இருந்து மலேசியாவிற்கு வருவோர் 14 நாட்களுக்குப் பதிலாக 21 நாட்கள் தனிமைப்படுத்தப்
படுவர் என்றும் அது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று தெரிவித்தார்.
முன்னதாக இந்தியாவில் இருந்து வருவோர் மட்டும் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர்.
மற்ற நாடுகளில் இருந்து வருவோர் 10 நாட்களுக்குப் பதிலாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படு
வர் என்றும் அவர் சொன்னார்.
நடப்பு பருவத்தின் கடைசி இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்கள் நேற்று அதிகாலை நடைபெற்றன.
அப்போது மான்செஸ்டர் சிட்டி குழுவுக்காக தான் விளையாடிய கடைசி ஆட்டத்தில் செர்ஜியோ அகுவேரோ இரட்டை கோல் போட எவர்ட்டனை 5-0 என்ற கோல் கணக்கில் அக்குழு வென்றது.
அகுவேரோ பார்சிலோனா குழுவிற்கு செல்வது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதாக சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா கூறினார்.
இபிஎல் பட்டியலில் 86 புள்ளி
களுடன் இப்பருவத்தின் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது சிட்டி. இது கடந்த நான்கு ஆண்டுகளில் அக்குழு வென்ற மூன்றாவது இபிஎல் கிண்ணமாகும்.
74 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடித்தது மான்செஸ்டர் யுனைடெட்.
லிவர்பூல், செல்சி முறையே 3வது, 4வது இடத்தைப் பிடித்ததால் அவை சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதி பெற்றன.
லெஸ்டர் சிட்டி ஐந்தாவது இடத்தில் முடிக்க, ஆறாவது இடத்திற்கு முன்னேறிய வெஸ்ட் ஹேம் குழு யூரோப்பா லீக்கிற்குத் தகுதி பெற்றது.
டோட்டன்ஹம், ஆர்சனல், லீட்ஸ், எவர்ட்டன் குழுக்கள் முறையே அடுத்தடுத்த இடங்களில் இருந்தன.

