முதன்-மு-றை-யாக நீதி-மன்-றத்-தில் முன்-னி-லைப்-ப-டுத்-தப்-பட்-டார் மியன்-மா-ரின் ஆங் சான் சூச்சி

முதன்-மு-றை-யாக நீதி-மன்-றத்-தில் முன்-னி-லைப்-ப-டுத்-தப்-பட்-டார் மியன்-மா-ரின் ஆங் சான் சூச்சி

1 mins read
308fcebe-1862-4d4b-9636-00bccf54a7c6
-

யங்­கூன்: மியன்­மா­ரின் முன்­னாள் தலை­வர் ஆங் சான் சூச்சி நேற்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்

படுத்­தப்­பட்­டார்.

சென்ற பிப்­ர­வரி 1ஆம் தேதி நடந்த ஆட்சி கவிழ்ப்­பிற்­குப் பிறகு முதன்­மு­றை­யாக நேற்று அவர் வெளி­யு­ல­கில் காணப்­பட்­டார்.

ஆங் சான் சூச்­சி­யின் ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய ராணு­வம் அவர் உட்­பட 4,000 பேரைத் தடுப்பு காவ­லில் வைத்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

சட்­ட­வி­ரோ­த­மாக வாக்கி-டாக்கி ரேடி­யோக்­களை வைத்­தி­ருந்­தது, அர­சாங்க ரக­சிய சட்­டத்தை மீறு­வது உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­களை அவர் எதிர்­கொள்­கி­றார்.

நீதி­மன்­றத்­தில் காணப்­பட்ட சூச்சி, 75, நல்ல உடல்நலத்­து­டன் இருந்­த­தா­க­வும் விசா­ர­ணைக்கு முன்பு அவ­ரது சட்­டக் குழு­வு­டன் 30 நிமிட சந்­திப்பு நடத்­தி­ய­தா­க­வும் அவ­ரது வழக்­க­றி­ஞர் தாயே மவுங் மவுங் கூறி­னார்.

தனது வழக்­க­றி­ஞர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது 'மக்­க­ளின் ஆரோக்­கி­யத்தை விரும்­பு­வ­தாக' அவர் சொன்­னார். மேலும் விரை­வில் கலைக்­கப்­ப­டக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­படும் சூச்­சி­யின் ஜன­நா­யக தேசிய லீக் கட்­சி­யைப் பற்றி­யும் அவர் வெளிப்படை­யாக குறிப்­பிட்­டார்.

"மக்­க­ளுக்­காக கட்சி நிறு­வப்­பட்­டது, எனவே மக்­கள் இருக்­கும் வரை கட்சி இருக்­கும்" என்று சூச்சி சொன்­ன­தாக," மவுங் கூறி­னார்.

கடந்த நவம்­பர் மாதம் நடந்த தேர்­த­லில் சூச்­சி­யின் கட்சி மோசடி செய்­த­தா­கக் கூறும் ராணுவ ஆட்­சிக் குழு­வின் தேர்­தல் ஆணை­யம் அவ­ரது கட்­சி­யைக் கலைக்­கப்­போ­வ­தாக ஆணை­யரை மேற்­கோள்­காட்டி வெளிவந்த வெள்­ளிக்­

கி­ழமை ஊடக செய்தி தெரி­வித்­தி­ருந்தது.