மலேசியா: ஒருநாள் தொற்று 7,000ஐ கடந்தது

மலேசியா: ஒருநாள் தொற்று 7,000ஐ கடந்தது

2 mins read
b18cf7d7-9e57-45ec-b50c-9c1087357a1a
-

கோலா­ல­ம்­பூர்: மலே­சி­யா­வில் 24 மணி நேரத்­தில் 7,289 பேர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். கிரு­மிப் பர­வல் தொடங்­கி­யது முதல் மலே­சி­யா­வில் ஒரே நாளில் பதி­வான ஆக அதிக எண்­ணிக்கை இது. மேலும் முதல்­மு­றை­யாக தொற்று எண்­ணிக்கை 7,000ஐ கடந்­துள்­ளது.

இரு நாட்­க­ளுக்கு முன்­னர் 6,976 என தொற்று எண்­ணிக்கை பதி­வா­னதே ஒரே நாளில் மலே­சி­யா­வில் பதி­வான ஆக அதிக எண்­ணிக்கை எனக் கரு­தப்­பட்ட நிலை­யில் நேற்று அது மேலும் அதி­க­ரித்­தது.

தொடர்ச்­சி­யாக ஏழு நாட்­கள் 6,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் பாதிக்­கப்­பட்டு வந்­த­னர். நேற்று அது 7,000ஐ கடந்­தது. இத­னை­யும் சேர்த்து மலே­சி­யா­வில் இது­வரை தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 525,889ஆக அதி­க­ரித்­து­விட்­டது.

மூன்­றாம் கட்ட கிரு­மிப் பர­வலை எதிர்த்து மலே­சியா போராடி வரு­கிறது. ஏரா­ள­மா­னோர் பாதிக்­கப்­பட்டு வரு­வ­தால் மருத்­து­வ­ம­னை­களில் உள்ள தீவி­ரக் கண்­கா­ணிப்­புப் பிரி­வு­களில் படுக்­கை­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு ஏற்­பட்டு வரு­கிறது.

புதிய தொற்று எண்­ணிக்­கை­யில் மூன்­றில் ஒரு பங்கு கிள்­ளான் பள்­ளத்­தாக்­கில் பதி­வாகி வரு­கிறது. குறிப்­பாக சிலாங்­கூர் மாநி­லத்­தில் 2,642 என நேற்று பதி­வான நிலை­யில் கோலா­லம்­பூ­ரில் அந்த எண்­ணிக்கை 604 ஆக இருந்­தது.

அண்­டைய நெகிரி செம்­பி­லா­னி­லும் பாகாங்­கி­லும் முறையே 410 மற்­றும் 211 தொற்­றுச் சம்­ப­வங்­கள் நேற்று பதி­வா­யின.

அதே­நே­ரம் ஜோகூ­ரில் 664 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. பினாங்­கில் அந்த எண்­ணிக்கை 380ஆக இருந்­தது.

தொற்­றுப் பர­வல் அதி­வேக நிலையை எட்டி இருப்­ப­தாக மலே­சியா சுகா­தா­ரத் துறை தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா நேற்று தெரி­வித்­தார்.

2021 ஏப்­ரல் 1 முதல் அன்­றா­டம் பதி­வா­கும் தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. மோச­மான கட்­டத்­தைச் சமா­ளிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்டு உள்­ளது என்று நேற்று அவர் தமது டுவிட்­ட­ரில் குறிப்­பிட்­டார்.

தொற்­றுப் பர­வலை முறி­ய­டிக்க பொது­மக்­கள் அனை­வ­ரும் வீட்­டி­லேயே தங்கி இருக்­கு­மாறு அவர் வேண்­டு­கோள் விடுத்­தார்.

"பதி­வா­கும் உண்மை நில­வ­ரங்­க­ளை­யும் தர­வு­க­ளை­யும் புறக்­க­ணிப்­பது நிலை­மையை மேம்­ப­டுத்த உத­வாது.

"மேலும் வீட்­டில் தங்­கா­மல் வெளி­யில் வரு­வ­தற்­குச் சொல்­லப்­படும் கார­ணங்­களும் தொற்று முறி­ ய­டிப்பு முயற்­சிக்­குப் பலன் தராது," என திரு நூர் ஹிஷாம் கூறி­னார்.

மலே­சி­யா­வில் நேற்று முன்­தி­னம் தொற்று கார­ண­மாக 61 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

711 நோயா­ளி­கள் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் உள்­ளனர். இந்த இரு எண்­ணிக்­கை­யும் மலே­சியா இது­வரை கண்­டி­ரா­தவை. தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்த வண்­ணம் உள்­ள­தாக நேற்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.