ஓஹையோ துப்பாக்கிச்சூட்டில் பலர் மரணம்

ஓஹையோ துப்பாக்கிச்சூட்டில் பலர் மரணம்

1 mins read
99b637b9-60c8-4ed8-bb4a-953dfd9e29ee
-

கொலம்­பஸ், ஓஹையோ: கொலம்­பஸ் நகருக்கு வெளியே நேற்று அதி­காலை நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச்­சூட்­டில் பலர் மாண்­ட­தாக உள்­ளூர் செய்தி ஊட­கத் தக­வல் ஒன்று தெரி­வித்­தது.

ஓஹை­யோ மாநிலத்தின் வெஸ்ட் ஜெஃபர்­சன் கிரா­மத்­தில் உள்ள இரட்­டைக் குடி­யி­ருப்பு ஒன்­றில் அரு­கில் பல உடல்­கள் காணப்­பட்­ட­தா­க­வும் 'த கொலம்­பஸ் டிஸ்­பேட்ச்' என்­னும் செய்­தித்­தாள் கூறி­யது.

வீட்­டி­னுள் மூன்று உடல்­களும் வெளி­யில் மேலும் சில உடல்­களும் காணப்­பட்­ட­தாக உள்­ளூர் தொலைக்­ காட்சி ஒன்று கூறி­ய­தாக நியூ­யார்க் டைம்ஸ் தெரி­வித்­தது.

உள்­ளூர் நேரப்­படி திங்­கட்­

கி­ழமை மாலை 5.30 மணி­ய­ள­வில் சம்­ப­வம் குறித்து தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தாக போலிஸ் கூறி­யது.

சுமார் 4,000 பேர் வசிக்கும் அந்தக் கிரா­மத்­தின் தலைமை போலிஸ் அதி­காரி கிறிஸ்­டஃபர் ஃப்ளாய்ட் என­ப­வரை மேற்­கோள் காட்டி தொலைக்­காட்சி செய்தி வெளி­யிட்­டது.

இருந்­த­போ­தி­லும் மொத்­தம் எத்­தனை பேர் மர­ண­ம­டைந்­த­னர், அவர்­க­ளின் பெயர் விவ­ரம் என்ன, துப்­பாக்­கிச்­சூட்டை நடத்­தி­யது யார், அதற்­கான நோக்­கம் என்ன என்­பன குறித்து அதி­கா­ரி­கள் எது­வும் தெரி­விக்­க­வில்லை.

கொள்­ளைச் சம்­ப­வ­மா அல்­லது குறி­வைத்து நடத்­தப்­பட்ட தாக்­கு­தலா என்­பது குறித்து இன்­னும் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்று திரு ஃப்ளாய்ட் அந்த தொலைக்­காட்­சி­யி­டம் கூறி­னார்.