தாய்லாந்தில் தடுப்பூசி ஆர்வம் குறைந்ததாக தகவல்

தாய்லாந்தில் தடுப்பூசி ஆர்வம் குறைந்ததாக தகவல்

1 mins read
a96ec8b7-b62f-4413-bbee-4e40ae931926
-

பேங்­காக்: கொவிட்-19 கிரு­மித்­தொற்றை எதிர்த்­துப் போராடி வரும் மற்­றொரு ஆசிய நாடான தாய்­லாந்­தில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தில் தயக்­கம் நில­வு­வ­தாக கருத்­துக்­க­ணிப்பு ஒன்று தெரி­விக்­கிறது.

கிரு­மித்­தொற்று கடந்த ஆண்டு பர­வத் தொடங்­கி­யது முதல் தாய்­லாந்­தில் 135,439 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

இது­வரை 832 பேர் தொற்று கார­ண­மாக உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். இந்­நிலையில் வரும் ஜூன் 7ஆம் தேதி மாபெ­ரும் தடுப்­பூ­சித் திட்­டத்­தைத் தொடங்­கு­வ­தற்­கான பணி­களில் அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

ஆண்டு இறு­திக்­குள் சுமார் 70 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடு­வது அவர்­க­ளின் இலக்கு. ஆனால் 'யூகோவ்' என்­னும் ஆய்வு நிறு­வ­னம் நடத்­திய கருத்­துக்­க­ணிப்­பில் 63 விழுக்­காட்டு மக்­கள் மட்­டுமே தடுப்­பூசி போட விருப்­பம் தெரிவித்­துள்­ள­னர்.

ஜன­வரி மாதம் இந்த விழுக்­காடு 83 ஆக இருந்­தது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை 'சுவான் டுசிட்' என்­னும் உள்­ளூர் நிறு­வன கருத்­துக்­க­ணிப்­பும் கிட்­டத்­தட்ட இத­னையே பிர­தி­ப­லித்­தது. 64 விழுக்­காட்டு மக்­களே தடுப்­பூ­சிக்­குத் தயா­ராக இருப்­ப­தாக அது குறிப்­பிட்­டது.

"அர­சாங்­கம் வாங்கி வைத்­துள்ள தடுப்­பூ­சி­கள் பற்றி மக்­கள் கவ­லைப்­படுகிறார்­கள்.

"தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மாட்­டோம் என்­ப­தைக் காட்­டி­லும் தடுப்­பூ­சிக்கு முன்­வ­ரு­வ­தில் தயக்­கமே அதி­கம் உள்­ளது," என்று ஃபேஸ்புக் பய­னா­ளர் ஒரு­வர் கூறி­னார். இதேபோல பலரும் சமூக ஊடகங்களில் கூறிவருகின்றனர்.