தைவானில் உள்ளூர் தொற்று அதிகரிப்பு

தைவானில் உள்ளூர் தொற்று அதிகரிப்பு

1 mins read
9d352b4b-e993-4965-8a1c-78d483ed7cdf
-

தைப்பே: தைவா­னில் உள்­ளூர் கிரு­மித்­தொற்று எண்­ணிக்­கை பெருகி வரு­கிறது.

அங்கு நேற்று 542 பேருக்கு புதி­தாக கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

பல மாதங்களாக தொற்று அபா­யத்­தி­லி­ருந்து தப்­பித்து வந்த தைவா­னில் அண்­மைய சம்­ப­வங்­கள் சவா­லாக அமைந்து வரு­கின்­றன.

புதி­தாக உள்­ளூ­ரில் அதி­க­ரித்து வரும் தொற்­றும் சம்­ப­வங்­க­ளைத் தொடர்ந்து தைவான் தனது கொவிட்-19 எச்­ச­ரிக்­கை­நி­லையை ஜூன் 14 வரை நீட்­டித்­துள்­ளது. மக்­கள் ஒன்­று­கூ­டு­வ­தற்கு விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள் அந்த தேதி வரை தொட­ரும் என்ற அறி­விக்­கப்­பட்டுள்ளது.

இத்­த­கைய கட்­டுப்­பா­டு­கள் மே 28ஆம் தேதி வரை விதிக்­கப்­பட்டு இருந்த நிலை­யில் இப்­போது அவை நீட்­டிக்­கப்­பட்டுள்­ளன.