அமெரிக்க, எகிப்து தலைவர்கள் ஆலோசனை

அமெரிக்க, எகிப்து தலைவர்கள் ஆலோசனை

1 mins read
f1b217aa-dea5-4cd8-89da-90b4d82be98b
-

கெய்ரோ: எகிப்து அதி­பர் அப்­துல்­ஃபட்டா அல்-சிசி­யு­டன் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் தொலை­பேசி வழி தொடர்­பு­கொண்டு காஸா சண்டை­ நி­றுத்­ததை வலுப்­ப­டுத்­து­வது தொடர்­பாக ஆலோ­சனை நடத்­தி­னார்.

பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் அவ­சர மனி­தா­பி­மான உத­வி­களை மேற்­கொள்­வது, அனைத்­து­லக மறு­நிர்­மாண முயற்­சி­களை முடுக்­கி­வி­டு­வது போன்ற விவ­கா­ரங்­கள் குறித்­தும் இரு தலை­வர்­களும் ஆலோ­சனை நடத்­தி­ய­தாக எகிப்து அதி­பர் மாளிகை தெரி­வித்­தது.

இஸ்­ரே­லுக்­கும் பாலஸ்­தீ­னத்­துக்­கும் இடை­யில் அமை­தியை மீட்­டெ­டுக்­கும் நடை­மு­றை­கள் குறித்­தும் அவர்­கள் விவா­தித்­த­தாக அது தனது அறிக்­கை­யில் கூறி­யது.

இஸ்­ரேல் படை­யி­ன­ருக்­கும் பாலஸ்­தீ­னப் போரா­ளி­க­ளுக்­கும் இடை­யில் 11 நாட்­கள் நீடித்த சண்டை எகிப்­தின் தலை­யீட்­டால் நிறுத்­தப்­பட்­டது.

சண்டை நிறுத்­தத்­தின் நான்­கா­வது நாளில் இரு தலை­வர்­க­ளின் ஆலோ­சனை இடம்­பெற்­றது. வரும் திங்­கட்­கி­ழமை அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிலிங்­கன் அந்த வட்­டா­ரத்­திற்கு வருகை மேற்­கொள்­ளும்­போது கெய்­ரோ­வில் இறங்கி சமா­தான முயற்­சி­க­ளைக் கையாள்­வது தொடர்­பாக பேச்சு நடத்­து­வார் என்று ராய்ட்­டர்ஸ் தெரி­வித்து உள்­ளது.