செய்-திக்-கொத்து

செய்-திக்-கொத்து

2 mins read
75138010-2317-4173-9256-73ac8d165275
தேசிய தலைவர் தேர்தல் முடிவை அதிகாரபூர்வமாக ச.விக்னேஸ்வரனிடம் (இடது) அளிக்கும் ஜி.இராஜூ.படம்: இணையம் -

மாலத்தீவில் கடும் கட்டுப்பாடுகள்

மாலே: கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு மாலத்தீவு நேற்று முதல் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. மாலை 4 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரை கடுமையான ஊரடங்கு நடப்பில் இருக்கும் என்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஒரு சில மணி நேரத்திற்கு மக்கள் வெளியே செல்லலாம் என்றும் சுகாதார பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.

'வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்'

யங்கூன்: ஓரிரு நாட்களுக்கு முன் ராணுவத்திற்கும் போராளி

களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலின்போது தேவா

லயம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது அங்கு தஞ்சம் புகுந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நால்வர் கொல்லப்பட்டதுடன் எட்டுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து கவலை தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பேராயர், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்கு

தல்கள் நிறுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

ஒலிம்பிக் வீரர்களுக்குத் தடுப்பூசி

தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்துவரும் ஜப்பான், ஜூன் 1 முதல் தனது விளையாட்டு வீரர்களுக்குத் தடுப்பூசி போடத் தொடங்குகிறது. சுமார் 600 தடகள வீரர்கள் மற்றும் பயிற்று

விப்பாளர்கள், அதிகாரிகள் என வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கக்கூடிய 1,000 பேருக்குத் தடுப்பூசி போடப் படும்.

தாய்லாந்தின் தடுப்பூசி திட்டம்

பேங்காக்: அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், துறை

களைச் சேர்ந்தவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட தாய்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அங்கு கிருமிப் பரவல் அதிகரித்து வரும் வேளையில், இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன்படி பேங்காக், அதன் அருகிலுள்ள மாநிலங்கள், சுற்றுலாத்தலங்கள், கட்டுமானத் தளங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற கிருமிப் பரவலுக்கு அதிக சாத்தியமுள்ள இடங்களில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் கொவிட்-19 பணிக்குழு தெரிவித்துள்ளது.

மஇக தேசிய தலைவராக விக்னேஸ்வரன் போட்டியின்றி தேர்வு

கோலாலம்பூர்: மஇகாவின் அடுத்த தேசிய தலைவராக

ச.விக்னேஸ்வரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்றாண்டுகளுக்கு அல்லது கட்சியின் அடுத்த தேசிய தலைவர் தேர்தல் நடைபெற்று முடியும் வரையில்

ச.விக்னேஸ்வரன் மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசிய தலைவராக இருப்பார் என்று தேர்தல் குழுவின் தலைவர் ஜி.இராஜூ அறிவித்தார்.