தடுப்-பூசி பெறு-வதை சீனா தடுக்-கிறது: தைவான் சாடல்

தடுப்-பூசி பெறு-வதை சீனா தடுக்-கிறது: தைவான் சாடல்

2 mins read
b5b87ecc-7ded-4a2d-9f6f-e2abb3ffb2fc
-

தைப்பே: ஜெர்­ம­னி­யின் பயோ­என்­டெக் உட­னான தடுப்­பூசி ஒப்­பந்­தத்தைத் தடுத்­த­தாக தைவான் முதல் முறை­யாக சீனா மீது நேர­டி­யாக குற்­றம் சாட்­டி­யுள்­ளது.

அஸ்ட்­ரா­ஸெ­னிக்கா மற்­றும் மொடர்­னா­வி­டம் பல மில்­லி­யன்­

க­ணக்­கான தடுப்­பூ­சி­க­ளுக்கு தைவான் பதிவு செய்­துள்­ளது. ஆனால், இது­வரை கிட்­டத்­தட்ட 700,000 தடுப்­பூ­சி­கள் மட்­டுமே தைவா­னுக்­குச் சென்று சேர்ந்­துள்­ளது.

அங்கு கிரு­மிப் பர­வல் வேக­மெ­டுத்து உள்ள நிலை­யில், வெறும் 1 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

பயோ­என்­டெக் உட­னான ஒப்­பந்­த­த்தைப் பெறு­வ­தில் சீனா­வின் நெருக்­கடி இருப்­ப­தாக முன்பு மறை­மு­க­மாக கூறி வந்த தைவான் தற்­போது நேர­டி­யா­கவே சாடி­யுள்­ளது.

தைவா­னின் ஆளும் ஜன­நா­யக முற்­போக்­குக் கட்­சி­யின் கூட்­டத்­தில் பேசிய அதி­பர் சாய் இங்-வென், "அஸ்ட்­ரா­ஸெ­னிகா, மொடர்னா தடுப்­பூ­சி­க­ளுக்­கான ஒப்­பந்­தம் சுமு­க­மாக முடிந்­தது.

"ஜெர்­ம­னி­யின் பயோ­என்­டெக் தடுப்­பூ­சி­யைப் பொறுத்­த­வரை, நாங்­கள் கிட்­டத்­திட்ட அதன் ஒப்­பந்­தத்­தைப் பெற நெருங்­கி­விட்­டோம். ஆனால், சீனா­வின் தலை­யீடு கார­ண­மாக இப்­போது வரை அதை முடிக்க வழி இல்லை," என்று கூறி­னார்.

இது­பற்றி பயோ­என்­டெக் எந்த கருத்­தும் தெரி­விக்­க­வில்லை என்­றா­லும் தாங்­கள் அவ்­வாறு எது­வும் செய்­ய­வில்லை என்று சீனா மறுப்பு தெரி­வித்­துள்­ளது.

கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள்

இதற்­கி­டையே, நேற்று தைவா­னில் 633 புதிய தொற்று சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்ள நிலை­யில், அங்கு கட்­டுப்­பா­டு­கள் மேலும் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

இதன்­படி அங்கு உண­வ­கங்­களில் உண­வ­ருந்த தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. திரு­மணம் மற்­றும் துக்க நிகழ்­வு­க­ளுக்­கும் கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அதோடு முகக்­க­வ­சம் அணி­யா­த­வர்­க­ளுக்கு அபரா­தம் விதிக்­கப்­படும் என்­றும் அந்­நாட்­டின் சுகா­தார அமைச்­சர் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், கொவிட்-19

கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை முடி­வுக்­காக மக்­கள் ஒன்­பது நாட்கள் காத்­தி­ருக்க வேண்­டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்­களில், கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை மேற் கொள்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை வேகமாக அதி­க­ரித்­துள்­ள­தால், அவற்­றைச் சமா­ளிக்க பரி­சோ­தனை மையங்­கள் மிக­வும் சிர­மப்­ப­டு­வ­தா­க­வும் அத­னால் முடி­வு­கள் தாம­த­மா­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.