வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பைடன் போலிஸ் சீர்திருத்தச் சட்டம் தொடர் பான தனது வாக்குறுதியை காப் பாற்றவில்லை என்று கூறியுள்ளார் ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் சகோதரி பிரிட்ஜெட் ஃபிளாய்ட்.
அமெரிக்காவில் நிறவெறிக்குப் பலியான ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் ஓராண்டு நினைவையொட்டி நடந்த பேரணியின் போது அவர் இவ்வாறு கூறினார். அதிபர் பைடனுடனான சந்திப்பை அவர் புறக்கணித்த நிலையில், மற்ற குடும்ப உறுப்பினர்கள் வெள்ளை மாளிகையில் அவரைச் சந்தித்தனர்.
சென்ற ஆண்டு கறுப்பின ஆடவரான ஃபிளாய்ட்டின் கழுத்தில் வெள்ளையின போலிஸ் அதிகாரியான டேரக் சவான் தனது முட்டியால் அழுத்தியதில் சிகிச்சை பலனின்றி அவர் மாண்டார்.

