வாஷிங்டன்: பாதிக்கும் மேற்பட்ட பெரியவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டு கொண்டுவிட்ட
தாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வரும் ஜூலை 4ஆம் தேதிக்குள் 70% பெரியவர்களுக்குக் குறைந்தது ஒருமுறையாவது தடுப்பூசி போடுவதே இலக்கு என்று ஆறு வாரங் களுக்கு முன்பு அதிபர் பைடன் கூறியிருந்தார்.
இதனால் அங்கு புதிதாக தொற்றுக்கு ஆளா
வோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகின் றது. அமெரிக்காவின் தற்போதைய ஏழு நாள் சராசரி எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட
25 விழுக்காடு குறைந்துள்ளது என்றார் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு, தடுப்பு மைய இயக்குநர் ரோசெல் வெலன்ஸ்கி.

