உள்நாட்டு போருக்கு மத்தியில் சிரியாவில் அதிபர் தேர்தல்

உள்நாட்டு போருக்கு மத்தியில் சிரியாவில் அதிபர் தேர்தல்

1 mins read
7591fa28-f4cb-41bb-a9c6-c43451171c71
-

உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. வரும் வெள்ளிக்கிழமை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தற்போதைய அதிபர் ஆசாத் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அப்துல்லா சலூம் அப்துல்லா, எதிர்க்கட்சியைச் சேர்ந்த மஹ்மூத் அகமது மரே ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர். இருப்பினும், இந்தத் தேர்தல் வெறும் கண்துடைப்பிற்கு நடத்தப்படும் தேர்தல் என்றும் ஆசாத் அதிபர் பதவியில் இருக்கும் வரை தேர்தல் நேர்மையாக நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. அதிபர் ஆசாத் மற்றும் அவரது மனைவி டோமாவில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்