'சீனாவுடன் ஒத்துப்போகும் யுகம் முடிந்துவிட்டது'

'சீனாவுடன் ஒத்துப்போகும் யுகம் முடிந்துவிட்டது'

2 mins read
8c11ea52-c292-4d4b-85b0-17d183f67121
-

பெய்­ஜிங்: உல­கின் இரண்­டா­வது ஆகப்­பெ­ரிய பொரு­ளி­யல் நாடாக சீனா விளங்­கு­கிறது. அதன் அதி­பர் ஸி ஜின்­பிங் நாட்டை தனது தீவி­ரப்பிடி­யில் இறுக்கி வரு­கி­றார்.

இந்த நிலை­யில் சீனாவிடமிருந்து கடு­மை­யான போட்­டியை எதிர்­நோக்­கும் கால­கட்­டத்­தில் அமெ­ரிக்கா நுழை­வ­தாக வெள்ளை மாளி­கை­யின் ஆசி­யா­வுக்­கான உயர் அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­துள்­ளார்.

அமெ­ரிக்­கா­வின் பிர­பல பல் ­கலைக்­க­ழ­க­மான ஸ்டான்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழ­கம் நடத்­திய நிகழ்ச்­சியில் பேசிய இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­துக்­கான பாது­காப்பு மன்­றத்­தின் அமெ­ரிக்க ஒருங்­கி­ணைப் ­பா­ளர் குர்ட் கேம்பல், "சீனா­வு ­ட­னான ஒத்­துப்­போ­கும் காலம் முடிந்துவிட்­டது," என்றார்.

சீனா­வுக்­கான அமெ­ரிக்­கா­வின் கொள்கை இனி புதிய உத்­தி­க­ளின் அடிப்­ப­டை­யில் இருக்­கும். இத­னால் போட்டி கடு­மை­யாக இருக்­கும் என்­று அவர் தெரிவித்தார்.

அமெ­ரிக்­கா­வின் கொள்கை மாற்­றத்­திற்கு சீன அதி­ப­ரின் கொள்­கை­களே கார­ணம் என்­று திரு கேம்பல் மேலும் கூறினார்.

இந்­தி­யா­வு­ட­னான சீன எல்­லை­யில் நடந்த ராணுவ மோதல், ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக சீனா மேற்­கொண்­டுள்ள பொரு­ளி­யல் பிர­சா­ரம், மற்ற நாடு­களை அச்­சு­றுத்­தும் அர­ச­தந்­தி­ரம் போன்­ற­வற்றை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

பெய்­ஜிங்­கின் நடத்­தை­கள் நாளுக்கு நாள் கடு­மை­யாகி வரு­கிறது. அதில் அந்­நாடு உறு­தி­யாக இருப்­ப­தை­யும் அறி­கு­றி­கள் காட்­டு­ வ­தாக திரு கேம்பல் குறிப்பிட் டார்.

இரு நாடு­க­ளுக்கு இடையே புதிய பதற்­றத்துக்கான அறி­கு­றி­கள் தென்­படும் வேளை­யில் சீனா­வுக்கு எதி­ராக திரு கேம்பல் கடுமையாகப் பேசியுள்ளார்.

இதற்­கி­டையே அமெ­ரிக்க வர்த்­தகப் பிர­தி­நிதி கேத்­த­ரின் டாயும் சீனா­வின் துணைப் பிர­த­மர் லியூ ஹியும் முதல் முறை­யாக தொலை­பே­சி­யில் பேசி­யுள்­ள­னர்.

முன்­ன­தாக ராட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் பேசிய டாய், இரு தரப்­பி­ன­ரும் பெரிய அள­வி­லான சவால்­களை எதிர்­நோக்­கு­வ­தாக தெரி­வித்­தார்.

இவ்வேளையில் அமெ­ரிக்க அதிபர் ஜோ பைட­னின் நிர்­வாகம், கொவிட்-19 கிருமி தோன்­றிய இடத்­தைக் கண்­ட­றி­யும் முயற்­சி­யில் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளது.

சீனா­வின் வூஹான் ஆய்­வ­கத்­தி­லி­ருந்­து­ அந்­தக் கிருமி கசிந்து வெளி­யே­றி­யதா என்­ப­தைக் கண்டு­பி­டிக்­கு­மாறு உள­வுத்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு அதி­பர் ஜோ பைடன் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்­ப­ரில் சீனா­வின் வூஹான் நக­ரி­லி­ருந்து பர­வி­ய­தா­கக் கூறப்­படும் கொவிட்-19 கிருமி, உலகம் முழு­வதும் தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வரு­கிறது.

மில்­லி­யன் கணக்­கான மக்­கள் மடிந்­து­விட்­ட­னர். உலக நாடு­க­ளின் பொரு­ளி­ய­லும் அடி­மட்­டத்­துக்குச் சரிந்­துள்­ளது.

நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், போக்குவரத்து பாதிக்கப் பட்டு உள்ளதால் உலக மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக் கின்றனர். அந்தக் கிருமி உலக மக்களின் வாழ்க்கையையே தலை கீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.

கிருமிப்பரவலால் அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன.