தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

S$847,000 மதிப்புள்ள சிங்கப்பூர், யுஎஸ் டாலர் கள்ள நோட்டுகள்; பெண் கைது

1 mins read
d5d41e3b-1108-4b76-8118-431412d7d637
-

பேங்­காக்: பேங்­காக்­கில் உள்ள மளி­கைக் கடை­யில் கிட்­டத்­தட்ட 20 மில்­லி­யன் பாட் (S$847,000) மதிப்­புள்ள கள்ள நோட்­டு­கள் வைத்­தி­ருந்­த­தாக ஒரு பெண்ணை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

பொரு­ளி­யல் குற்­றச்­செ­ய­லுக்கு ஆளான அந்­தப் பெண்­ணின் பெயர் அனான்யா, 41 என்று அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது.

நாணய மாற்று வியாபாரம் செய்யும் வாடிக்­கை­யா­ளர் ஒரு­வ­ருக்கு பெரும் தொகை­யி­லான சிங்­கப்­பூர் டாலரை விற்க முயற்சி செய்­த­போது அவர் பிடி­பட்­டார் என்று பேங்­காக் போஸ்ட் தெரி­வித்­தது.

சந்­தேக நபர் வைத்­தி­ருந்த பையில் 10,000 சிங்­கப்­பூர் வெள்ளி போலி நோட்­டு­க­ளின் 74 இருந்­தன. இதன் மதிப்பு 17 மில்­லி­யன் பாட். அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­ய­தும் போலி நோட்­டு­கள் தன்­னு­டை­யது என்று கூறிய பெண் குற்­றத்­தை­யும் ஒப்­புக் கொண்­டார்.

கடைக்கு அரு­கில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த காரி­லி­ருந்து மேலும் 100 யுஎஸ் டாலர் நோட்­டு­க­ளாக 296,000 பாட் மதிப்­புள்ள நோட்­டு­கள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததையும் அதி­கா­ரி­கள் கண்டு­ பி­டித்­த­னர்.

கைது செய்­யப்­பட்ட அந்­தப் பெண் மீது போலி நோட்­டு­க­ளைக் கொண்டு மோசடி செய்ய முயற்சி செய்­த­தா­கக் குற்­றம் சாட்­டப்­படும் என்று போலி­சார் தெரி­வித்­ த­னர்.