ஆஸ்திரேலியர் மீது உளவு பார்த்த வழக்கு

1 mins read
fb9f605f-d9a9-4e93-84b8-8787b2ed2aa8
(மேல் படம்) சீனாவில் நீதிமன்றத்துக்கு வந்த ஆஸ்திரேலியத் தூதர் மற்றும் பிரதிநிதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். படம்: இபிஏ(வலம்) யாங் ஹெங்ஜுன். படம்: யாங் ஹெங்ஜுன்டுவிட்டர் -
multi-img1 of 2

பெய்­ஜிங்: சீனா­வில் ஆஸ்­தி­ரே­லி­யர் மீதான உளவு பார்த்­த­தா­கக் கூறப்­படும் வழக்கு விசா­ரணை நேற்று தொடங்­கி­யது.

சீனா­வில் பிறந்து ஆஸ்­தி­ரே­லியக் குடி­ம­க­னான யாங் ஹெங்­ஜுனை இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு விமான நிலை­யத்­தில் சீன அதிகாரி­கள் கைது செய்­த­னர்.

வழக்கு விசா­ரணை ரக­சி­ய­மாக நடை­பெற்­றது. நீதி­மன்­றத்­தில் நுழைய முயன்ற ஆஸ்­தி­ரே­லியத் தூதர் தடுத்து நிறுத்­தப்­பட்­டார். யாங்­கின் உற­வி­னர்­கள் அளித்த விண்­ணப்­பங்­களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்த வழக்­கில் அரசு ரக­சி­யங்­கள் அடங்­கி­யி­ருப்­ப­தால் பொது நீதி­மன்­றத்­தில் விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை என்று சீனா கூறி­உள்­ளது. ஆனால் வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெறவில்லை என்று ஆஸ்தி ரேலிய தூதர்கள் தெரி வித்துள்ளனர்.

இது மிகவும் வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளதாக சீனாவுக்கான ஆஸ்தி ரேலிய தூதர் கிரஹம் ஃபிலட்செர் நீதிமன்றத்துக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டாக்டர் யாங் கல்விமான் ஆவார். சீனாவின் விவகாரம் தொடர்பில் வலைப்பதிவில் அவர் எழுதி வந்தார். அனால் அண்மைய ஆண்டுகளாக சீன அரசாங்கத்தை நேரடியாக விமர்சித்து வந்தார்.

இதையடுத்து 2019ல் சீனாவில் யாங் கைது செய்யப்பட்டார்.