அதிவேகமாகப் பரவும் கிருமி; விக்டோரியா ஒரு வாரம் முடக்கம்

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் அதிக மக்­கள் வசிக்­கும் இரண்­டா­வது மாநி­ல­மான விக்­டோ­ரி­யா­வில் ஒரு வாரம் முடக்­க­நிலை அறி­விக்­கப்பட்­டுள்­ளது.

தலை­ந­கர் மெல்­பர்­னில் கொவிட்-19 கிருமி அதி­வே­க­மா­கப் பரவு­வ­தால் வியா­ழன் (நேற்று) நள்­ளி­ரவு முதல் ஒரு வாரத்­திற்கு முடக்­கப்­படும் என்று அரசு தெரி­வித்­தது.

இது­வரை 26 தொற்­றுச் சம்­ப­வங்­களை அதி­கா­ரி­கள் உறு­தி செய்துள்ளனர். 150 கிரு­மிப் பர­வும் இடங்­களும் அடை­யா­ளம் காணப்­பட்டு உள்­ளன.

கடந்த ஆண்டு 2வது அலை ஏற்­ப­டுத்­திய பாதிப்பை விக்­டோ­ரியா மக்­கள் இன்­ன­மும் மறந்­து­வி­ட­வில்லை. இந்நிலையில் புதிய கிருமிப் பரவலால் பலர் அச்­ச­மடைந்­துள்­ள­னர்.

விக்­டோ­ரி­யா­வின் இடைக்­கால முதல்­வர் ஜேம்ஸ் மெர்­லினோ, அதி­வே­க­மா­கப் பர­வக்­கூ­டிய உரு­மா­றிய பி.1.617 கிரு­மி­யால் தொற்று அதி­க­ரித்­துள்­ளது என்­றார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குத் திரும்­பிய பயணி ஒரு­வர் அத்­த­கைய கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார் என்ற அவர், எதிர்­பா­ராத வேகத்­தில் தொற்று பர­வி­ய­தா­க­வும் கூறி­னார்.

காற்பந்துப் போட்டி நடந்த மெல்பர்ன் அரங்கம் உட்பட மாநிலம் முழுவதும் பல இடங்களுக்கம் புதிய தொற்றுச்சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"ஏறக்குறைய 10,000 சம்பவங் களில் கிருமித்தொற்றுக்கான தொடர்பு இருக்கிறது. விக்டோரியா மாநிலத்தைச் சுற்றிலும் 150க்கும் மேற்பட்ட கிருமிப்பரவும் குழுமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

"இப்போதே செயல்பட்டாக வேண்டும். இதற்கு மேலும் காத் திருந்தால் எல்லை மீறிப் போய்விடும்," என்று ஜேம்ஸ் மெர்லினோ கூறினார். கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் விக் டோரியாவில் 26 சம்பவங்களே பதி வாகியுள்ளன. ஆனால் 10,000க்கும் மேற் பட்டோருக்குத் தொற்று ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!